கையில பீர், காலுக்கு கீழே உலக கோப்பை.. இந்திய வீரர்களின் உணர்ச்சியை கேவலப்படுத்திய ஆஸ்திரேலியா!

World Cup 2023: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு நேற்றைய தினம் என்பது கருப்பு தினமாக அமைந்துவிட்டது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. அதே நேரத்தில் இதுவரை நடந்த அத்தனை போட்டிகளிலும் வென்று வந்த இந்தியா நேத்து 50 ஓவர்களில் அத்தனை விக்கெட்டுகளையும் இழந்து விட்டது.

சுப்மான் கில் மற்றும் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பொழுதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உலக கோப்பையின் மீதான நம்பிக்கை அரை மனதாக மாறி இருந்தது. இருந்தாலும் எப்படியாவது ஜெயித்து விடுவோம் என்று நம்பிக்கை வைத்து பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஆஸ்திரேலியா நாற்பத்தி நான்காவது ஓவரிலேயே இந்தியா கொடுத்த இலக்கை அடைந்து விட்டது.

அனைத்து லீக் போட்டிகளிலும் மற்ற நாடுகளை கதறவிட்ட இந்திய அணி நேற்று கண்ணீருடன் மைதானத்தை கடந்து போனது எல்லோருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. தோல்வியுற்றது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் மார்ஷ் செய்த காரியம் ஒட்டுமொத்த இந்தியர்களையும் வெறுப்படைய செய்திருக்கிறது.

மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர். இவர் ஏற்கனவே உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் மோதும் என ரொம்பவும் தைரியமாக பேசியவர். அதே நேரத்தில் இந்தியா இறுதி ஆட்டத்திற்குள் ஆஸ்திரேலியாவுடன் மோதி தோற்று இருப்பதால் தான் என்னவோ இப்படி ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

நேற்று ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையை கைப்பற்றிய பிறகு மிட்செல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவருடைய காலுக்கு அடியில் உலகக்கோப்பை இருக்கிறது கையில் பீர் பாட்டிலுடன் உட்கார்ந்திருக்கிறார். உலகக் கோப்பை எல்லாம் எங்களுக்கு ஒன்னும் பெரிய விஷயமே இல்லை என்று நக்கலாக அவர் சொல்வது போல் புகைப்படம் இருக்கிறது.

மிட்செல் மார்ஷ் பகிர்ந்த புகைப்படம்

world cup
world cup

ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இந்த கிரிக்கெட் உலக கோப்பை பல நாடுகளுக்கும் ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணி ரொம்பவும் நக்கலாக இதெல்லாம் எங்களுக்கு பெரிய விஷயமே இல்லை என்று மற்ற நாடுகளை கேலி செய்வது போல் இந்த புகைப்படம் அமைந்திருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →