தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழக வீரர்கள்.. ராகுல் டிராவிட் சொல்லியும் கேட்காத பிசிசிஐ

இந்திய அணியில் தொர்ந்து தமிழக வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள நன்றாக விளையாடியும் அவர்களுக்கான போதுமான வாய்ப்பு வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5-6 வருடங்களாகவே இத்தகைய சூழ்நிலை இந்திய அணியில் இருந்து வருகிறது.

தமிழக வீரர்கள் ஆகிய பலர் சில கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். அவர்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை, கொடுத்த வாய்ப்பில் சிறப்பாக விளையாடினாலும் அடுத்து ஏதாவது ஒரு காரணம் சொல்லி அணியிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் இந்திய அணியில் நிறைய தமிழக வீரர்கள் வருவதும் போவதுமாய் இருந்து வருகின்றனர். சிறப்பாக செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான் போன்ற வீரர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரு சில போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அனைத்து விதமான போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. இவரும் அணிக்குள் நிரந்தரமான இடம் கிடைக்க போராடி வருகிறார்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான் போன்ற வீரர்கள் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இவர்கள் இருவர் மீதும் ராகுல் டிராவிட் நிறைய நம்பிக்கை வைத்துள்ளார். அவர்களை அணிக்குள் கொண்டாடுவதற்கு போராடியும் பலனில்லை. அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படும் நிலையில் அவர்கள் நிச்சயமாக வருங்கால இந்திய அணியில் மேட்ச் வின்னர் ஆக இருப்பார்கள்.

ஏற்கனவே கழட்டி விடப்பட்ட யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜனும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அணியில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்தாலும் இன்றுவரை அவருக்கு உண்டான வாய்ப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →