தோனியை பங்கமாய் கலாய்த்த ஷேவாக்.. விரேந்தரின் பேவரைட்டான மாகி பாய்யின் 2 ஆட்டங்கள்

அடுத்தடுத்து இரண்டு தோல்விகள் சென்னை அணியை இக்கட்டான சூழ்நிலைக்கு போய்விட்டது என இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் ஆரம்பத்திலேயே எச்சரித்துள்ளார்.

ஒரு முழு பினிஷராக தோனியை பார்த்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் சேவாக்.

180 ரன்கள் கூட சேஸ் செய்வதற்கு சென்னை அணி தினறி வருகிறது. இதற்கு காரணம் தோனி 8, 9 இடங்களில் களம் இறங்குவது தான் என்றுகூறி வருகிறார். தோனி தனக்குத்தானே ஹை பிரஷர் சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்கிறார்.

தன்னால் முடிந்த அளவிற்கு மேட்சை பினிஷ் செய்வதற்கு போராடி வருகிறார். ஆனால் பல நேரங்களில் அது கை கொடுக்காது எனவும் கூறியுள்ளார்.

இரண்டு ஓவர்களில் 40 ரன்கள் அடிப்பது மிக மிக கடினம். அந்த மாதிரி சூழ்நிலைகளில் தான் தோனி மைதானத்திற்குள் வருகிறார். இது சென்னை அணிக்கு நல்லதல்ல.

கடைசி ஓவர் வரை ஒரு போட்டியை கொண்டு செல்வது கடினமான ஒன்று. 20 ஓவர் போட்டியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

சென்னைஅணியைப் பொறுத்தவரை தோனி பின் வரிசையில் இறங்குவதால் எப்படியும் இக்கட்டான சூழ்நிலையில் தங்களை காப்பாற்றி விடுவார் என நம்புகிறார்கள்.

ஆனால் அது அவருக்கு அழுத்தத்தை கொடுக்குமே தவிர அணிக்கு உதவாது. போட்டியை முன் வரிசை வீரர்கள் சாதகமாக்கி கொடுக்க வேண்டும்.

தான் பார்த்ததில் தோனியின் இரண்டு ஆட்டங்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ளார் சேவாக். 2016 ஆம் ஆண்டு அக்சர் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் தோனி 24 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதும், மற்றொரு போட்டியில் இர்பான் பதான் ஓவரில் 20 ரன்கள் அடித்ததும் தான் தன்னுடைய பேவரைட் எனக் கூறியுள்ளார்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →

Leave a Comment