இலங்கை நட்சத்திர வீரரின் பரிதாப நிலை.. மைதானத்திலேயே உதடு கிழிந்து காணாமல் போன 4 பற்கள்

இலங்கை அணிக்கு இது போதாத காலம் போல. ஏற்கனவே அந்த அணியின் வீரர்கள் பல சர்ச்சையில் சிக்கி தங்கள் பெயரை மட்டுமல்லாது, மொத்த இலங்கை நாட்டு கிரிக்கெட் வாரியத்தையும் கேவலப்படுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி வீரர்கள் கீழ்த்தரமான வேலைகளை செய்து தங்கள் பெயரை கெடுத்து போலீசில் சிக்கினார்கள். இது கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இலங்கையின் ஸ்டார் பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா. இவர் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு பெண்ணை பலவந்தப் படுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இவர் மீது தப்பு இருப்பது அதிகாரப் பூர்வமாக நிரூபிக்கப் பட்டது.

தனுஷ்கா குணதிலகா செயலால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை அனைத்து விதமான போட்டிகளில் விளையாட தடை செய்தது. தொடர்ந்தும் இலங்கை வீரர்கள் பலர் ஆஸ்திரேலியா நாட்டில்  இரவு விருந்தில் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்பட்டதாக நிறைய குற்றச்சாட்டுகள் வந்தது.

இது ஒருபுறம் இருக்க, இப்பொழுது அந்த நாட்டின் ஆல்ரவுண்டர் சமிக கருணாரத்னே உள்ளூர் போட்டியில் விளையாடும் போது பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஒரு பந்தை கேட்ச் செய்வதற்காக முயற்சிக்கையில் ஏற்பட்ட சிறிய கவனக்குறைவால் வாயை உடைத்துக் கொண்டார்.

Chamika
Chamika

இதில் மைதானத்திலேயே சுருண்டு விழுந்த அவர் வாயிலிருந்து ரத்தம் கொட்டோ கொட்டு என்று கொட்டியது. வாயில் மிகவும் வேகமாக பந்து தாக்கியதால் அவரது 4 பற்கள் தெறித்து விழுந்தது. அது மட்டுமின்றி அவருடைய உதடுகள் பத்து தையல்கள் போடும் அளவிற்கு கிழிந்து தொங்கியது. இந்த மாதிரி ஒரு மோசமான காயத்தை கிரிக்கெட் விளையாடும் போது நாங்கள் பார்க்கவில்லை என்று மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →