தமிழ் சினிமா ரசிகர்களிடையே கடந்த சில ஆண்டுகளாக 1000 கோடி கிளப் பற்றி பெரிய விவாதம் நடந்து வருகிறது. பாலிவுட், Tollywood படங்கள் அந்த மைல் கல்லை எட்டிய நிலையில், தமிழ் படங்கள் இன்னும் அந்த உயரத்தை அடையாதது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்திய பேட்டியில் 1000 கோடி குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
1000 கோடி வரப்போகுது, ஆனால் இன்னும் சில வருடங்கள் வேண்டும் – சிவகார்த்திகேயன், தமிழ் சினிமா அந்த லெவலுக்கு போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில் நிச்சயம் 1000 கோடி படங்கள் வரும் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
ஸ்டோரி குவாலிட்டி & பான்-இந்தியா ரீச் முக்கியம்
அவர் மேலும், “பல தமிழ் படங்கள் 1000 கோடி அடைய முடியாததற்கு முக்கிய காரணம் ஸ்டோரி டெல்லிங் குவாலிட்டி இல்லாமை அல்லது பான்-இந்தியா ரீச் இல்லாமைதான். உலகம் முழுவதும் பேச வைக்கும் கதை இருந்தால் தான் அது சாத்தியம்” என்று தெரிவித்துள்ளார்.
டிக்கெட் விலை விவகாரம்
சுவாரஸ்யமாக, டிக்கெட் விலை குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். “மும்பை, பெங்களூரு மாதிரி டிக்கெட் விலை வைத்திருந்தால் Jailer படம் சுலபமாக 800 – 1000 கோடி சென்றிருக்கும். ஆனாலும் நான் டிக்கெட் விலை அதிகரிப்பதை ஆதரிக்கவில்லை. அது ரசிகர்களுக்கு சிரமமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
வட இந்தியாவில் நுழைவு அவசியம்
சிவகார்த்திகேயன், “தமிழ் சினிமாவுக்கு நார்த் இந்தியா பேனிட்ரேஷன் அவசியம். அங்கு நம்ம படங்கள் பெரிய அளவில் செல்லும்போது தான் 1000 கோடி மைல்கல் சாத்தியமாகும்” என்றார்.
ஏற்கனவே கூலி படம் ஆயிரம் கோடி வசூலைத் சுலபமாக தொடும் என எதிர்பார்க்கப்பட்டது நடக்கவில்லை. இதனால் அதிக எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள லோகேஷ்-ரஜினி-கமல் கூட்டணி 1000 கோடி வசூலை தொடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.