ரொனால்டோவுக்காக புது சட்டம் போட்ட அரபு நாடு.. ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி சம்பளமா?

கால்பந்து போட்டி என்றாலே முதலில் நினைவுக்கு வரும் நபர் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.இவரது ஆட்டத்தை பார்க்க பல நாடுகளில் இருந்து வரும் மக்கள் அரங்கத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள். கால்பந்து வீரர்கள் உலகில் எத்தனையோ பேர் இருந்தாலும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் தான் அதிகம். அதிலும் சமூகவலைத்தளத்தில் இவரை 525 மில்லியன் பயனாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.

இவ்வளவு பெருமை வாய்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரராகவும் உள்ளார். கடந்தாண்டு 2022 இல் கத்தாரில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா வென்ற நிலையில், ரொனால்டோவின் போர்டுகள் நாடு  தோல்வியுற்றது. இதனை தொடர்ந்து ரொனால்டோ தற்போது சவுதி அரேபியா நாட்டின் கால்பந்தாட்ட குழுவுடன் இணைத்துள்ளார்.

அல் நசர் என்ற சவூதி நாட்டின் பழமை வாய்ந்த கால்பந்தாட்ட குழுவில் சேர்ந்து விளையாட ரொனால்டோவை சவூதி நாடு அண்மையில் தேர்வுசெய்தது. நடப்பாண்டு முதல் 2025 ஜூன் மாதம் வரை ரொனால்டோ சவூதி நாட்டின் கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாட ஒப்புதல் வாங்கியுள்ளது. இதனிடையே ரொனால்டோவுக்கு சவூதி கொடுத்து வரும் சம்பளம் மற்றும் சலுகைகள் உலகையே வாயை பிளக்க வைத்துள்ளது.

பொதுவாக விளையாட்டு வீரர்கள் பிரபலங்களுக்கு ஒரு நாள் அல்லது ஒரு மணி நேரத்திற்கான சம்பளம் வழங்கப்படும். ஆனால் ரொனால்டோவிற்கு ஒரு நொடிக்கான சம்பளமே நம் இந்திய மதிப்பின்படி 588 ரூபாயாம். இப்படி கணக்குப்போட்டு பார்த்தால் ஒரு மணி நேரத்துக்கு ரொனால்டோவின் சமபளம் 144 கோடியாகும் . இப்படி வருடத்திற்கு 200 மில்லியன் டாலர் சம்பளத்தை சவூதி நாடு அவருக்கு வழங்கி உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரராக உருவாகியுள்ளது.

இதுமட்டுமில்லை ,பொதுவாக அரபு நாடுகள் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் நாடு என்பதால் பலவிதமான கடும் கட்டுப்பாடுகள் உள்ளது. அதிலும் சவூதி அரேபிய நாடு மற்ற துபாய், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளை காட்டிலும் கட்டுப்பாடுகளும், தண்டனைகளும் சற்று அதிகம் எனலாம். அதில் முக்கியமான கட்டுப்பாடு தான் ஆணும், பெண்ணும் திருமணத்திற்கு முன்பாக ஒன்றாக சந்திப்பது, ஒரே வீட்டில் வசிக்கும் லிவிங் டுகெதர் உள்ளிட்ட மேற்கத்திய நாகரிகம் உள்ளிட்டவற்றுக்கு சவுதி நாட்டில் அனுமதியே கிடையாது.

ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு மட்டும் லிவிங் டுகெதர் உறவு முறையில் இருக்க சவூதி நாடு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான காரணம் ரொனால்டோ திருமண பந்தத்தில் ஈடுபடாமல், தனது பெண் தோழியான பிரபல மாடல் அழகி ஜார்ஜியாவுடன் ஒரே வீட்டில், குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக சவூதி நாடு கிறிஸ்டியானோ ஜார்ஜியாவுக்கு மட்டும் லிவிங் டுகெதர் உறவு முறையில் இருக்க அனுமதி வழங்கியுள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →