புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒத்தப்பன் சுடலை உக்கிரமா வந்திருக்கான்.. கலகலப்பான நடிப்பு இல்லாமல் திணறும் எதிர்நீச்சல்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் காணாமல் போன குணசேகரன், தம்பிகள் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார் என்று தெரிந்ததும் ஓடி வந்து அவர்களை காப்பாற்றி பாசமலையை கொட்டுகிறார். அத்துடன் இவருடைய ஆரம்ப காலத்தை நினைவூட்டும் வகையில் கண்டக்டர் வேலையை பார்த்த விஷயங்களை தம்பிகளிடம் பகிர்ந்து கொள்கிறார்.

அப்பொழுது என்னை சுற்றி எத்தனையோ பெண்கள் வந்து சைட் அடித்தாலும், என்னுடைய நினைப்பு எல்லாம் என் தம்பிகளை பெரிய இடத்தில் பணக்காரங்களாக வாழ வைக்கணும் என்பதுதான். அதற்காக நான் யாரையும் ஏறெடுத்து கூட பார்க்கவே இல்லை. ஆனாலும் என் மனதிற்குள் புகுந்தவர் தான் சாரு பாலா.

Also read: வில்லத்தனத்தில் கதிகலங்க வைத்த ஆதி குணசேகரன்.. மொத்தமாக மாறிய கேரக்டர், திசை மாறும் எதிர்நீச்சல்

அதன் பின்னர் சாரு பாலாவை கல்யாணம் பண்ண வேண்டும் என்பதற்காக எஸ்கேஆர் ஐ கூட்டிட்டு போனேன். அதுதான் நான் செய்த பெரிய தப்பு, நான் படிக்கவில்லை என்று என்னைய வேண்டாம் என சொல்லி எஸ்கேஆர் ஐ அந்தச் சாறுபாலா கல்யாணம் பண்ணிக்கிட்டா. இது எனக்கு எவ்வளவு பெரிய துரோகம் என்று தம்பிகளிடம் சொல்கிறார்.

உடனே ஜனனி உள்ளே புகுந்து அவங்க வாழ்க்கையே முடிவெடுக்கும் உரிமை அவர்களுக்குத்தான் இருக்கு. இது எப்படி உங்களுக்கு செய்த துரோகம் ஆகும் என்று வழக்கம்போல் குணசேகரனை கேள்வி கேட்கிறார். அதற்கு ஜனனியை பார்வையாலேயே எரித்து பஸ்பம் ஆக்கியது போல் குணசேகரன் ஆக்ரோஷமான கோபத்தை காட்டினார்.

Also read: ரமணா பட பாணியில் இறந்த குணசேகரனுக்கு உயிர் கொடுத்து வரும் எதிர்நீச்சல்.. கதிர், ஞானத்தை விட நல்லவரா?

அதன் பின் அனைவரும் வீட்டிற்கு போகிறார்கள். இதற்கு இடையில் குணசேகரின் அம்மா என் மகன் வருகிறான் எல்லாரும் போய் அலங்காரம் பண்ணிட்டு வாங்க என்று சொல்கிறார். அதேபோல் குணசேகரன் வரும்பொழுது அனைவரும் அலங்காரம் பண்ணிக்கொண்டு அவரை ஆர்த்தி எடுத்து வரவேற்கிறார்கள்.

இதற்கிடையில் குணசேகரனின் மாமா இப்போது வந்து கொண்டிருப்பது சாதாரண குணசேகரன் இல்ல, ஒத்தப்பன் சுடலை சாமி உக்கிரமாக வந்துகிட்டு இருக்காரு என்று சொல்கிறார். இதனால் ரொம்பவே கதி கலங்கி அந்த விட்டு மருமகள் பயத்துடனே இருப்பது போல் தெரிகிறது. அத்துடன் குணசேகரன் வீட்டிற்குள் நுழைந்ததும் வழக்கம் போல் மாமனாரை வச்சு வாங்குகிறார். அடுத்தபடியாக இவருடைய டார்கெட் ஈஸ்வரி நோக்கி பாயப் போகிறது. ஆனாலும் பழைய மாதிரி எதிர்நீச்சல் சீரியலில் கலகலப்பான நக்கல் நையாண்டி இல்லை என்று பார்ப்பவர்கள் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

Also read: இந்தாம்மா ஏய், மருமகள்களுக்கு ஆப்படிக்க வரும் புது குணசேகரன்.. பிபி-யை எகிற வைக்கும் எதிர்நீச்சல்

Trending News