இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 17 படங்கள்.. மிஸ் ஷெட்டியாக கம்பேக் கொடுத்த அனுஷ்கா

October 6th OTT Release Movies: ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் பல படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 6 ஆம் தேதி கிட்டத்தட்ட 17 படங்கள் வெளியாகிறது. மேலும் இந்த வாரம் திரையரங்குகளிலும் நிறைய படங்கள் வரிசை கட்டி இருக்கிறது. விஜய் ஆண்டனியின் ரத்தம், திரிஷாவின் தி ரோடு, விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று படங்கள் வெளியாகிறது.

அந்த வகையில் ஓடிடியில் ஆதி, ஹன்சிகா ஆகியோர் நடிப்பில் வெளியான பாட்னர் படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ் மொழியில் பாட்னர் மட்டும் வெளியாகும் நிலையில் மற்ற மொழிகளில் அதிக படங்கள் வெளியாக இருக்கிறது. அதன்படி தெலுங்கில் சமீபத்தில் அனுஷ்கா நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலி ஷெட்டி படம் வெளியாகி இருந்தது.

சமீபகாலமாக அனுஷ்கா நடிப்பில் வெளியான படங்கள் வரவேற்பை பெறாத நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. மேலும் அக்டோபர் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகிறது. அடுத்ததாக தெலுங்கில் மிஸ்டர் பிரகனண்ட் என்ற படம் ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் மலையாளத்தில் இந்த வாரம் எந்த படமும் ஓடிடியில் வெளியாகவில்லை. ஹிந்தியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஓஎம்ஜி 2 படம் வெளியாகிறது. மும்பை டைரிஸ் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகிறது. மேலும் கொரியன் மொழியில் பலேரினா என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

அதோடு மட்டுமல்லாமல் நெட்பிளிக்ஸில் ஆங்கில படங்களாக ஃபேர் பிலே, லூபின், சூப்பர் பம்ப்ஸ் மற்றும் எவரிதிங் நவ் போன்ற படங்கள் வெளியாகிறது. மேலும் ஸ்பானிஷ் மொழியில் ஏ டெட்லி இன்னவேஷன் என்ற படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஆகையால் இந்த வாரம் ரசிகர்களுக்கு சிறப்பாக அமைய இருக்கிறது.

அதுவும் குறிப்பாக ஹாலிவுட்டில் தான் நிறைய படங்கள் வெளியாகிறது. இப்போது திரையரங்கை காட்டிலும் ஓடிடியில் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக பார்ப்பதால் தியேட்டரை விட அதிக படங்களை ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். மேலும் மிக விரைவில் மார்க் ஆண்டனி மற்றும் இறைவன் போன்ற படங்களும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →