ஜூன் 2026 OTT தளங்களில் கலக்கி கொண்டிருக்கும் மற்றும் வெளியாகவிருக்கும் முக்கியத் திரைப்படங்களின் லிஸ்ட்:
கறுப்பு (Karuppu): அமேசான் பிரைம், ஜூன் 12, 2026
சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தியேட்டர்களில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த ‘கறுப்பு’ திரைப்படம் இந்த வாரம் OTT-க்கு வருகிறது. ஆக்ஷன் மற்றும் ஃபேண்டசி கலந்த கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், சூர்யாவின் மிரட்டலான நடிப்புக்காகவும் விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் ரசிகர்களிடம் தியேட்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தியேட்டரில் தவறவிட்டவர்கள் இந்த வாரம் முதல் தங்களது இல்லங்களிலேயே பார்க்கலாம்.
துரந்தர் 2: தி ரிவெஞ்ச், ஜியோ ஹாட்ஸ்டார், ஜூன் 5, 2026
ரன்வீர் சிங், மாதவன் மற்றும் சஞ்சய் தத் நடிப்பில் தியேட்டர்களில் 1800 கோடிக்கு மேல் வசூல் செய்த மெகா ஹிட் படத்தின் அன்கட் பதிப்பு தமிழ் ஆடியோவுடன் வெளியாகியுள்ளது. தியேட்டர் பதிப்பை விட கூடுதலாக 3 நிமிடக் காட்சிகளுடனும், 30 நிமிட BTS காட்சிகளுடனும் வெளியாகியுள்ள இந்தப் படம், பாகிஸ்தானில் உள்ள ஒரு குற்றப்பின்னணி நெட்வொர்க்கை ஹீரோ எப்படி அழிக்கிறார் என்ற அதிரடியான ஸ்பை த்ரில்லர் படம்.
கார்மேனி செல்வம்: அமேசான் பிரைம் , ஜூன் 3, 2026
சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ஒரு எதார்த்தமான தமிழ் திரைப்படம். சொந்தமாக ஒரு டாக்ஸி பிசினஸ் செய்து, தன் குடும்பத்திற்கு ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் ஒரு சாதாரண டிரைவரின் வாழ்க்கையைச் சுற்றியே இந்த படம் செல்லும். அவர் சந்திக்கும் நிதி நெருக்கடிகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் கடன் சுமைகள் அவரை எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளுகிறது என்பதை விவரிக்கும் படம்.
பேட்ரியாட்: ஜீ5, ஜூன் 5, 2026
மம்மூட்டி, மோகன்லால், ஃபகத் பாசில் மற்றும் நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். ‘பெரிஸ்கோப்’ என்ற ஆபத்தான உளவு மென்பொருள் மூலம் நடக்கும் மிகப்பெரிய சதியை ஒரு விஞ்ஞானி எப்படிக் கண்டுபிடிக்கிறார், அதைத் தொடர்ந்து அந்த நெட்வொர்க்கை அழிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் என்ன என்பதே விறுவிறுப்பான இந்த படத்தின் கதை.