நெட்பிளிக்ஸ், சன் பிக்சர்ஸ் பலகோடி வாரி வழங்கியதற்கு இதுதான் காரணமா.? லோகேஷ் யுனிவர்ஸ் பார்த்து கதிகலங்கிய திரையுலகம்

லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் டைட்டில் வீடியோ நேற்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. நேற்று காலை முதலே தளபதி 67 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் இடையே குழப்பம் இருந்தது.

கடைசியில் லியோ என்று தளபதி 67க்கு பெயரிடப்பட்டுள்ளது. மேலும் எப்போதுமே படத்தின் டிரைலர் வெளியான பிறகு தான் படம் வியாபாரமாகும். லோகேஷ், விஜய் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது என்ற செய்தி வெளியானதில் இருந்தே தளபதி 67 படத்தை கைப்பற்ற வேண்டும் என பிரபல ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தது.

அந்த வகையில் லியோ படத்தின் பூஜை அன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி மற்றும் சன் பிக்சர்ஸ் சாட்டிலைட் உரிமையை கிட்டத்தட்ட 250 கோடிக்கு வாங்கினார்கள். மேலும் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் வாங்கி உள்ளது. அப்போது இவ்வளவு கோடி கொடுத்து தளபதி 67 படத்தை வாங்கியுள்ளார்கள் என பலரும் வியந்து பார்த்தார்கள்.

ஆனால் இப்போது டைட்டில் வீடியோவை பார்த்த ரசிகர்கள் 400 கோடி கொடுத்து கூட இந்த படத்தை வாங்கலாம் என பேசி வருகிறார்கள். ஏனென்றால் அந்த அளவுக்கு வீடியோவை ரொம்ப தெளிவாக கொடுத்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது மற்ற டாப் நடிகர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் தளபதி 67 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக டைட்டில் வீடியோவில் லோகேஷ் போட்டுள்ளார். ஆகையால் முன்னணி நடிகர்களின் படங்களும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதால் லியோ படத்திற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு படத்தை கொடுக்க வேண்டும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

லியோ படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலை தாண்டும் என்று கூறப்படுகிறது. எனவே இந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை தவறவிட்டு உள்ளோமே என்று மற்ற நிறுவனங்கள் புலம்பி வருகிறது. மேலும் லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாக உள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →