திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

210 படங்களில் இத்தனை படங்கள் தான் ஹிட்.. அப்போ மற்ற படங்கள் ப்ளாப்பா?

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கான படங்கள் ரிலீசாகி வருகின்றன. இதில், குறிப்பிட படங்கள் மட்டுமே வெளியாகி ஜெயிக்கின்றன. மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுகின்றன.

அதன்படி, முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களோ அல்லது சிறிய பட்ஜெட் படங்களோ அது எதுவாக இருந்தாலும் ரசிகர்களுக்கு அது படம்தான். அதனால் அவர்களுக்குப் பிடித்த படங்களைக் கொண்டாடுவர்.

கதை, திரைக்கதை உள்ளிட்டவை எதேனும் படத்தில் பிடிக்கவில்லை என்றால், அப்படத்தை கண்டுகொள்ள மாட்டார். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழில் மட்டும் 215 படங்கள் வெளியாகியுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியதாவது;

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த ஆண்டில் இதுவரை 210 படங்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித லிஸ்டை ஒரு விமர்சகருக்கு நான் அனுப்பி வைத்தேன். அதில் 15 படங்கள் மட்டும்தான் வெற்றி அடைந்துள்ளன. மீதி 195 படங்களும் ஃப்ளாப் தான்.

அப்போது, வெற்றியடையவில்லை என்பதற்காக தயாரிப்பாளர்கள் முட்டாள்களா? அப்படியில்லை. ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அப்படங்களை ஆரம்பித்து, எடுத்துவிட்டார்கள். நான் சொல்வது 95 சதவீத படங்களின் தயாரிப்பாளர் ஒரு நம்பிக்கையில் படத்தை எடுத்துவிட்டனர்.

அது நல்லா இருக்கா? இல்லையா? என்பதை அந்தப் படைப்பு வெளியாகும் போதுதான் தெரியும். இது சமைப்பது மாதிரி தான். படைப்பாக உருவான பின்பு பார்க்கும் போதுதான் தெரியும். அதாவது, சமையல் நான் சமைக்கும் போது எதோ ஒன்றாக வரும், அம்மா சமையல் நன்றாக இருக்கும்.

அதுபோல் இந்த 95 சதவீத படங்கள் எடுத்தவர்களுக்கு இது நல்ல படைப்பாகத்தான் தெரியும். வெளியில் இருப்பவர்களின் விமர்சனம் வேறுபடும். ஏனென்றால் ஒரு படைப்பை உருவாக்குவோர் நம்பிக்கையின் அடிப்படையில்தான் படத்தை உருவாக்குவர் என்று தெரிவித்துள்ளார்.

வெற்றி பெற்ற படங்கள்?

இந்த ஆண்டு வெளியான படங்களில், ரத்னம், கருடன், மகாராஜா, கல்கி ஏடி, டீன்ஸ், ராயன், இந்தியன், கொட்டுக்காளி, வாழை, லப்பர் பந்து, மெய்யழகன், தி கோட், அமரன், பிரதர் ஆகியவை வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Trending News