80களில் பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை இயக்குவதில் பெயர் போனவர் டைரக்டர் பாரதிராஜா. அதிலும் இவருடைய படங்கள் துவங்கும் போது ‘என் இனிய தமிழ் மக்களே!’ என்று தன்னுடைய சொந்த குரலில் கூறி தனக்கென ஒரு தனி அடையாளத்தையும் பெற்றார். அதுமட்டுமல்ல ஆறு முறை தேசிய விருதை பெற்ற பாரதிராஜா 42 படங்களை எழுதி இயக்கியுள்ளார்.
ஆனால் ரெண்டு படங்களில் அவர் சொந்தமாக கதை எழுதி ஜெயிச்ச விஷயம் வெளிவந்துள்ளது. இயக்குனர் இமயம் பாரதிராஜா 1977 ஆம் ஆண்டு கமல், ஸ்ரீதேவி, ரஜினி உள்ளிட்டோர் 2 நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன 16 வயதினிலே என்ற படத்தை எழுதி இயக்கியதன் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கினார்.
Also Read: கனவு படத்திற்கு வழி விடாத உடல்நிலை.. இதுதான் என் கடைசி படம் ஒரே போடாய் போட்ட பாரதிராஜா
பாரதிராஜா இதுவரை 42 படங்களை இயக்கியுள்ளார், அதிக படங்கள் வெற்றி அடைந்துள்ளது. ஆனால் பாரதிராஜா இத்தனை படங்கள் இயக்கியும் தனது சொந்த கதை எழுதி திரைக்கதை எழுதியது இரண்டே இரண்டு படங்களுக்கு மட்டும். அதில் ஒரு படம் தான் சிவப்பு ரோஜாக்கள். கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1978 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் அதிரடி திரில்லர் திரைப்படம்.
கமல் இதில் சைக்கோ கில்லர் ஆக நடித்து மிரட்டி இருப்பார். இந்த படத்தின் கதையை கற்பனைக்கு அப்பாற்பட்ட கதையாக பாரதிராஜா உருவாக்கி வெற்றி பெற்றார். இதேபோன்று பாரதிராஜா சொந்தமாக எழுதி இயக்கிய இரண்டாவது படம் தான் டிக் டிக் டிக். கமல், மாதவி, ராதா நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த டிக் டிக் டிக் அதிரடி திரில்லர் படமாக வெளியானது.
Also Read: 80களில் ரஜினி, கமலையும் பயப்பட வைத்த 5 ஹீரோக்கள்.. பெண்களை விடுங்க ஆம்பளையும் சுற்ற வைத்த நடிகர்
இந்த படத்தில் பெண் மாடல்கள் வரிசையாக கொல்லப்படுவார்கள். இந்த வழக்கில் புகைப்பட கலைஞராக நடித்திருந்த கமல் மாட்டிக் கொள்வார். பின்னர் அவர் தனது பெயரை அழிக்க விசாரணையை தொடங்கி, உண்மையை எப்படி கண்டுபிடிப்பார் என்பதுதான் படத்தின் கதை. விறுவிறுப்பாகவும் திரில்லர் படமான இந்த படம், திரையரங்கில் தாறுமாறாக ஓடி வசூலில் பட்டையை கிளப்பியது.
இந்த இரண்டு படங்களைத் தவிர மீதம் இருக்கும் 40 படங்களுக்கு இவர் திரைக்கதை எழுதியது இல்லை. வேறு நபர்களை வைத்து குழுக்களாக அமைத்து படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக செல்வராஜ், இயக்குனர் பாக்கியராஜ் போன்றோர் இவர் பக்கத்தில் உறுதுணையாக இருந்துள்ளனர். அலைகள் ஓய்வதில்லை படத்தின் கதை கூட மணிவண்ணன் எழுதிய கதை. பாரதிராஜா இயக்கம் மட்டுமே.
Also Read: பாரதிராஜா நடிப்பிலும் ஜொலித்த 6 படங்கள்.. வில்லனாக நடித்து சூர்யாவை மிரட்டிய இயக்குனர் இமயம்