வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

மொத்தமாய் முடிவுக்கு வந்த பாகிஸ்தானின் கனவு.. ஒரே ஒரு வீரரை நம்பி தலைக்கனத்தில் கொடுத்த ஓவர் வாய்ச்சவுடால்

உலகக் கோப்பை 2023 அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு முடிவுக்கு வந்தது என்று கூறலாம். இன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான்அணிகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மிகப்பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறும்.

இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் தோற்றதில் இருந்தே பாகிஸ்தான் அணிஓவராக பேசி வந்தார்கள். நாங்கள் அரை இறுதிக்கு முன்னேறி இந்தியாவை தோற்கடித்து உலக கோப்பையை வெல்வோம் என்று வாய் சவுடாலாக பேசி வந்தனர். ஆனால் அதர் பின் அடுத்தடுத்து பல பரிதாப தோல்விகளை சந்தித்தனர்.

இப்பொழுது அரை இறுதி வருவதற்கு மிக நெருக்கடியில் இருக்கின்றனர்.  நியூசிலாந்த அணி 10 பாயிண்டுகளுடன் அதிக ரன் ரேட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது இதன் காரணமாக பாகிஸ்தான் அணி இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது..

அது மட்டும் இன்றி பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டாவது பேட்டிங் செய்யும் பட்சத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் அப்பொழுதுதான் நியூசிலாந்து அணியை இவர்கள் ரன் ரேட் விகிதத்தில் பின் தள்ள முடியும் ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை.எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெல்வது மிகவும் கடினம்.

ஒருவேளை பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து கிட்டத்தட்ட 450 ரண்களுக்கு மேல் எடுத்து இங்கிலாந்து அணியை 200 ரண்களில் சுருட்டினால் அவர்கள் கனவு பலிக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணியின் கனவு மொத்தமாய் பறிபோனது.

ஆவேசமான பாகிஸ்தான் அணி அதிரடி காட்டும் ஓபனிங் வீரரான பக்கர் ஜமானை மட்டுமே நம்பிக் கொண்டு நாங்கள் 500 ரன் அடிப்போம், இங்கிலாந்தை வெறும் 200 ரண்களில் சுருட்டுவோம் என ஓவர் வாய்ச்சவுடால் விட்டு வந்தனர். முகமது அமீர், அப்துல் ரசாக், வாசிம் அக்ரம் போன்ற வீரர்கள் வாய்கள் எல்லாம் இப்பொழுது இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News