ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

எங்க போனாலும் ஏளனம் செய்யும் பாகிஸ்தான்.. எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றிய சுனில் கவாஸ்கர்

இந்திய அணி, இங்கிலாந்து உடனான அரையிறுதிப் போட்டியில் படு தோல்வியடைந்து வெளியேறியது. இதுதான் இப்போது இந்திய நாட்டிற்கு மட்டுமல்லாமல் எல்லா கிரிக்கெட் விளையாடும் நாட்டினருக்கும் பேசுபொருளாக மாறியுள்ளது. நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா இப்படி தோல்வி அடைந்தது குறித்து பாகிஸ்தான் வீரர்கள் ஏளனம் செய்து வருகின்றனர்.

இந்தியா தோல்விக்கு அதுதான் காரணம், இந்தியா அப்படி செய்து இருந்தால் ஜெயிச்சு இருக்கலாம். இந்திய அணியில் பந்து வீச்சு மிக மோசமாக இருக்கிறது, இப்படி விளையாடினால் அவர்கள் வருங்காலத்தில் கடைசி இடத்திற்கு செல்வார்கள் என்று வாய்க்கு வந்த படி இந்தியாவை வறுத்து எடுத்து வருகிறார்கள் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்.

Also Read: பெரும் பிரச்சனையால் புதிய யுத்தியை கையாண்ட ரோஹித்.. அசராமல் பட்டாசை தெறிக்க விடப் போகும் இந்திய அணி

தோல்வியடைந்தால் மனவருத்தத்தில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு மேலும் இடி விழுவது போல் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய வீரர்கள் பணிச்சுமை அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் காசுக்காக ஐபிஎல் விளையாடுகிறார்கள். அதில் காயம் ஏற்பட்டாலும் அந்த காயத்தோடு விளையாடி காசு சம்பாதிக்கிறார்கள்.

இப்படி விளையாடும் அவர்கள் ஐசிசி நடத்தும் போட்டியில் இந்தக் காரணங்களை சொல்லி தப்பிக்கிறார்கள். இவர்கள் இவ்வாறு செய்வது பெரிய தவறு. அதுமட்டுமின்றி ஒரு வீரர் காயம் ஏற்பட்டு அணியில் விளையாட வில்லை என்றால் அவருக்கு பிசிசிஐ சம்பளம் கொடுக்கக் கூடாது. உடல் தகுதி இல்லை என்றால் அணியில் இருந்து விலகி விடவேண்டும்.

Also Read: விஷ்ணு விஷால் மனைவியுடன் கிசுகிசுக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டன்.. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

இந்திய அணியில் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருக்கிறார்.அவர் தலைசிறந்த பேட்ஸ்மேன். அவர் இருக்கும்போது பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ராத்தோரும் இருக்கிறார். அவர் எதற்கு என்ற கேள்வியையும் முன்வைக்கிறார். இப்படி இவர் ஐபிஎல் போட்டிகள் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று சொல்லும்போதே இங்கிலாந்து அணி கேப்டனும் இப்படி பேசியது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

ஜோஸ் பட்லர் கூறியதாவது, ஐபிஎல் போட்டிகளில் நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம், அது எங்கள் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்று இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோஸ் பட்லரும் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் பலம் மற்றும் பலவீனத்தை நாங்கள் ஏற்கனவே கணித்து வைத்திருந்தோம் என்று சொல்லியிருக்கிறார் பட்லர்.

Also Read: இந்திய அணி என்றாலே சதத்தை உறுதி செய்யும் 5 எதிரணி வீரர்கள்.. மரண அடி!

Trending News