கிரிக்கெட் எந்த அளவிற்கு பணப் பேராசை பிடித்த விளையாட்டு என்பதை பாகிஸ்தானைச் நாட்டை சேர்ந்த கிரிக்கெட் நடுவரின் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். பணப் பேராசை பிடித்த பலபேர் கிரிக்கெட்டை ஒரு சூதாட்டப் போட்டியாகவே கண்டு களிக்கின்றனர்.
கிரிக்கெட் வீரர்கள் பல பேர் இந்த சூதாட்ட கும்பலிடம் சிக்கி தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை இழந்துள்ளனர். ஏன் இந்திய வீரர்கள் கூட சூதாட்டத்தில் சிக்கி தங்களுடைய கேரியரை தொலைத்து உள்ளனர். முகமது அசாருதீன், நயன் மோங்கியா, அஜய் ஜடேஜா போன்றவர்கள் கிரிகெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
Also Read: ஓய்வு முடிவில் ஆல்ரவுண்டர்.. ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்கு அடுத்த அடி
வீரர்கள் தான் இப்படி என்றால் நடுநிலையோடு செயல்பட கூடிய நீதிபதி ஸ்தானத்தில் இருக்கும் நடுவர்கள் கூட இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை இழந்துள்ளனர். வீரர்கள் சிக்குவதை காட்டிலும் இது கொடுமையிலும் கொடுமை. இப்படி பாகிஸ்தானை சேர்ந்த ஒரு நடுவர் சூதாட்ட புகாரில் சிக்கி தன்னுடைய வாழ்க்கையை தொலைத்து உள்ளார்.
2000மாவது ஆண்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆசாத் ராவுப் என்னும் நடுவர் தன்னுடைய சிறப்பான பங்களிப்பால் அனைத்து விதமான போட்டிகளுக்கும் நடுவராக செயல்படும் அந்தஸ்தை ஐசிசி இடமிருந்து பெற்றார். ஆரம்பத்தில் இவரது செயல்பாடுகள் அனைத்தும் மிகவும் நேர்மையாக இருந்தது.
Also Read: எரிச்ச படுத்திய இந்திய அணி.. அனுபவமே இல்லாமல் ஓவர் மெத்தனம் காட்டி கேவலப்பட்ட வீரர்கள்
இதனை பார்த்து வியந்து போன ஐசிசி இவரை அதிகமான முதல்தர போட்டிகளில் நடுவராக பங்கேற்கும் வாய்ப்பை அளித்தது, ஆனால் காசுக்கு பேராசை பிடித்து அலைந்த இவர் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டக்காரர்கள் இடம் சிக்கி அதிக பணம், மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கியுள்ளார். இதனை மும்பை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மும்பையில் மாடல் அழகி ஒருவரை ஏமாற்றி அவரை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி அவரிடம் அத்துமீறி உள்ளார். இந்த வழக்கிலும் சிக்கி சின்னாபின்னமானார் ஆசாத் ராவுப். இப்பொழுது இவர் லாகூரில் உள்ள பிரபலமான லாண்டா பஜாரில் செருப்பு மற்றும் துணிகள் விற்கும் தொழில் செய்து வருகிறாராம். இப்படி கிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கி ஒருவர் வாழ்க்கை சீரழிந்தது கண்ணுக்கு முன்னே தெரிகிறது. அந்த அளவிற்கு கிரிக்கெட்டில் பணப் பேராசை தலைவிரித்து ஆடுகிறது
Also Read: வெளிநாட்டில் பிறந்து இந்திய அணிக்காக விளையாடிய 3 கிரிக்கெட் வீரர்கள்!