வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஐஸ்வர்யா ராயை அசிங்கமாக பேசிய பாகிஸ்தான் வீரர்.. கிளம்பிய எதிர்ப்பால் அடித்த அந்தர் பல்டி

Actress Aishwarya Rai: உலகக்கோப்பை 2023ம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். மேலும் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்தை எதிர்கொண்டு வெற்றியை தட்டி தூக்கியது.

இதை சூப்பர் ஸ்டார் தன் குடும்பத்துடன் வந்து கண்டு களித்தார். இந்த ஆரவாரம் ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் வீரர் ஒருவர் ஐஸ்வர்யா ராய் குறித்து சர்ச்சை கருத்தை கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தங்கள் அணி குறித்த பல விஷயங்களை தெரிவித்து இருந்தார்.

அதில் தங்கள் அணி சிறப்பாக செயல்பட ஒரு எழுச்சி வேண்டும். அன்றைய காலகட்டத்தில் எங்களுக்கு நிறைய ஊக்கம் கிடைத்தது. ஆனால் தற்போது அப்படி கிடையாது. வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் யாருக்கும் கிடையாது. ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டு பக்தியான ஒழுக்கமுள்ள குழந்தையை எதிர்பார்த்தால் நிச்சயம் நடக்காது.

Also read: ஃபுல் ஷார்ட்டில் அடிச்சுக்கவே முடியாத 6 கிரிக்கெட் வீரர்கள்.. ரோஹித் போல் பயம் காட்டும் அபாயகரமான ஆட்டக்காரர்கள்

அப்படித்தான் பாகிஸ்தான் அணியின் தற்போதைய நிலைமை இருப்பதாக சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார். அவரின் இந்த மோசமான பேச்சுக்கு உடன் இருந்த சாகித் அப்ரிடி, உமர் குல் ஆகியோர் வாய்விட்டு சிரித்தனர். அதைத்தொடர்ந்து இந்த வீடியோ வைரலாகி கடும் கண்டனங்களுக்கு ஆளானது.

பகிரங்கமாக ஐஸ்வர்யா ராயை அப்துல் ரசாக் அசிங்கப்படுத்தியதற்கு முன்னாள் வீரர் முகமது யூசுப் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு அப்துல் ரசாக் தன்னுடைய மன்னிப்பை கோரியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, கிரிக்கெட் பயிற்சி பற்றி பேசிய போது வாய் தவறி ஐஸ்வர்யா ராய் பற்றி நான் பேசி விட்டேன்.

இது அவரை புண்படுத்தி இருந்தால் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். வேண்டுமென்றே அவர் இப்படி படுமோசமாக பேசிவிட்டு தற்போது மன்னிப்பு என்ற பெயரில் அந்தர் பல்டி அடித்து இருக்கிறார். இதை ரசிகர்கள் தற்போது பயங்கரமாக விமர்சித்து வருகின்றனர்.

Also read: மண்டையில் மசாலா இல்லாமல் நடந்து கொண்ட 6 கிரிக்கெட்டர்ஸ்.. வாயில புண்ணோடு கிளம்பிய கௌதம் கம்பீர்

Trending News