ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கமலை வைத்து ரஜினியை சுளுக்கு எடுக்கும் ப்ளூ சட்டை.. நாயகன் படத்தால் சூப்பர் ஸ்டாருக்கு ஏற்பட்ட பீதி

Kamal And Rajini: தான் பேமஸ் ஆக வேண்டும் என்றால் பெரிய இடத்தை பகைத்தால் மட்டுமே சாத்தியமாக முடியும். இதை நன்றாக புரிந்து கொண்டு சினிமாவில் இருக்கும் பல உச்ச நட்சத்திரங்களையும், அவர்கள் நடிக்கும் படங்களையும் தாறுமாறாக விமர்சித்துக் கொண்டு வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன். அப்படிப்பட்ட இவர் ரஜினியை சீண்டிப் பார்ப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதற்கேற்ற மாதிரி சும்மா வெறு வாயில் மென்று கொண்டிருந்த ப்ளூ சட்டைக்கு தற்போது அவல்பொறியே கிடைத்துவிட்டது. அதாவது கமலை ஃபாலோ பண்ணி தான் ரஜினி கேரியரை உருட்டிக் கொண்டு வருகிறார் என்று அப்பட்டமாக இவருடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் விக்ரம் கதையைப் போலவே ஜெயிலர் படத்தை உருவாக்கியது.

Also read: மகளுக்கே ரஜினி வைத்த பெரிய செக்.. தலைவர் போட்ட கண்டிஷனால் ஆடிப் போன லைக்கா

மேலும் அந்த படத்தை எடுத்த லோகேஷை தலைவர் 171 படத்திற்கு கமிட் செய்தது. அடுத்ததாக கமல் எப்படி அவருடைய சூப்பர் ஹிட் மூவியான வேட்டையாடு விளையாடு படத்தை ரீ ரிலீஸ் செய்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாரோ, அதேபோல ரஜினியும் அவர் நடித்த படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கு தயாராகிக் கொண்டு வருகிறார் என்று ப்ளூ சட்டை கூறி வருகிறார்.

அந்த வகையில் ஏற்கனவே ரஜினி ரீ ரிலீஸ் செய்த பாபா படம் எதிர்பார்த்த அளவிற்கு போகாமல் தோல்வியை சந்தித்தது. அடுத்தபடியாக கமல் சரித்திர படமாக தற்போது வரை நின்னு பேசிக் கொண்டிருக்கும் நாயகன் படத்தை அவருடைய பிறந்த நாளை ஒட்டி நவம்பர் மாதம் ரீ ரிலீஸ் செய்வதற்கு ஏற்பாடு நடைபெற்று வருகிறது.

Also read: இந்த ஸ்டைலில் படம் பண்ணுங்க.. கமல் வார்த்தையால் எரிச்சலான ஹெச்.வினோத்

ஏற்கனவே நாயகன் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாகி அதிக லாபத்தை கொடுத்து கமல் கேரியர்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் மறுபடியும் ரீ ரிலீஸ் செய்தால் கண்டிப்பாக கமலின் புகழ் எல்லா பக்கமும் பறக்கும் என்பது நிதர்சனமான உண்மை. இந்த விஷயத்தினால் ரொம்பவே ரஜினி பயத்துடன் இருக்கிறார்.

அதனால் நாயகன் படத்துக்கு இணையாக ரஜினியும் அவருடைய ஹிட் படத்தை ரீ ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் ரஜினி நடித்த மிகப்பெரிய ஹிட் ஆன தளபதி படத்தை அவருடைய பிறந்தநாளுக்கு மறுபடியும் ரிலீஸ் பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு வருகிறார். இப்படி கமல் செய்யும் அனைத்திற்கும் எதிராக ரஜினி நடவடிக்கை இருப்பதால் ப்ளூ சட்டை ரஜினியை நக்கல் அடித்து வருகிறார்.

Also read: வடிவேலுக்கும், பிரம்மானந்தாக்கும் கமல் வைத்த செல்ல பெயர்.. வயிறு வலிக்க சிரித்த உலக நாயகன்

Trending News