திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கார்த்தி அடுத்தடுத்த எடுக்கப்போகும் மூன்று அவதாரங்களின் 2ம் பாகம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய சர்தார்-2

தமிழ் சினிமாவின் சத்தமில்லாமல் கார்த்தி பல வருடங்கள் நிறைய வெற்றிகளை கொடுத்து வருகிறார். அதே போல் இந்த வருடமும் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என 3 தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து டாப் கியரில் செல்கிறார். இதனால் இவருடைய நடிப்பில் வெளியான மூன்று படங்களின் இரண்டாம் பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

 கைதி 2: 2019ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கைதி. இந்த படத்தில் கார்த்தி சிறையிலிருந்து வெளிவந்த கைதியாக நடித்திருப்பார். இந்தப் படம் முழுவதும் போதைப் பொருள் கடத்தல் கும்பலால் எதிர்கொள்ளும் பிரச்சினையை மையமாக வைத்து உருவாக்கியிருப்பார்கள்.

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டு துவங்கும் என்றும் நடிகர் கார்த்தி சமீபத்தில் தெரிவித்த நிலையில், அந்த படம் சீக்கிரம் எடுத்து முடிந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கைதி 2 ரகசியத்தை போட்டு உடைத்த கார்த்தி.. உச்சகட்ட கடுப்பில் லோகேஷ்

பொன்னியின் செல்வன் 2: மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் சோழர்களின் வரலாற்றை போற்றும் வகையில் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகி தற்போது வரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த படத்தில் கார்த்தி வந்தியத் தேவனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பையும் மணிரத்னம் எடுத்து முடித்ததால் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

Also Read: விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

சர்தார் 2: கார்த்தியின் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ட்ரைலரில் கூட கண்டுபிடிக்காத அளவுக்கு இந்த படத்தில் கார்த்தி 16 கெட்டப்பில் வந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

எனவே சர்தார் வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பிரமோஷன் வீடியோவை வெளியிட்டு சர்தார் 2 படம் விரைவில் உருவாகும் என்றும் அறிவித்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளனர்.

Also Read: சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்

எனவே கார்த்தி அடுத்தடுத்த இனி எடுக்கப்போகும் மூன்று அவதாரங்களின் இரண்டாம் பாகத்தை சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்த மூன்று படங்களின் ரிலீஸ் தேதியும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News