வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

2023ல் வெளிவர இருக்கும் 10 ஹிட் படங்களின் 2-ம் பாகம்.. பொன்னியின் செல்வன் முடிவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் டாப் 10 படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது மட்டுமின்றி, அதன் 2ம் பாகத்திற்காக ரசிகர்களை காக்க வைத்திருக்கிறது. அந்த படங்களை அனைத்தும் அடுத்த ஆண்டு 2023இல் வெளியாக உள்ளதால் அது குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிலும் பொன்னியின் செல்வன் படத்தின் முடிவுக்காக அந்தப் படத்தின் 2ம் பாகத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஜிகர்தண்டா 2: 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 வருடங்கள் கழித்து மீண்டும் கார்த்தி சுப்புராஜ் அதன் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

தற்பொழுது ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ட்ரண்ட் ஆகி வருகிறது. இதில் எஸ்ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளன. ஜிகர்தண்டா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், 2ம் பாகத்திற்காக காக்க வைத்திருக்கும் படங்களின் லிஸ்டில் இந்த படம் 6-வது இடத்தை பிடித்துள்ளது .

சர்தார் 2: இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராசி கண்ணா நடிப்பில் வெளியாகி உள்ள அதிரடி திரில்லர் கலந்த சூப்பர் ஹிட் திரைப்படம் சர்தார். கார்த்தி இரு வேடங்களை ஏற்று முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் வெளிவரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டாம் பாகத்தை குறித்து அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களின் வரிசையில் சர்தார் 5-வது இடத்தில் உள்ளது.

Also Read: புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான 10 படங்கள்.. பல உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டிய ஜெய் பீம்

இந்தியன் 2: 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தில் கமலஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, நாசர், கவுண்டமணி,செந்தில் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படமானது சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பில் வெளியாக உள்ளது. இதில் கமலஹாசன் உடன் காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . இந்நிலையில் இந்தியன் 2 பட குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியன் 2 ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களின் வரிசையில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.

புஷ்பா 2: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளியான ஒரு அதிரடி திரைப்படம் இப்படத்தில் அல்லு அர்ஜுன், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டார் நடித்துள்ளனர். புஷ்பா திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளியானாலும் அதன் வெற்றியை தொடர்ந்து மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் 250 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட புஷ்பா திரைப்படம் இரண்டு பாகமாக வெளியாகும் என தகவல் வெளியாகி அதற்கான வேலைகள் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 2ம் பாகத்திற்காக காக்க வைத்திருக்கும் படங்களின் லிஸ்டில் இந்த படம் 3-வது இடத்தை பிடித்துள்ளது .

பொன்னியின் செல்வன் 2: இந்த வருடம் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கல்கியின் புதினமான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி உள்ளார். இது தமிழர்களின் வரலாற்று திரைப்படம் ஆகும். இதில் நடிகர் விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள நிலையில் இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைப்பது மேலும் பலத்தை சேர்த்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள டாப் 10 லிஸ்டில் 2-வது இடத்தில் உள்ளது.

Also Read: 2022-ல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 6 படங்கள்.. சர்வதேச அளவில் சாதனை படைத்த ஆண்டவர்

விக்ரம் 2: 2022 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ஒரு ஆக்சன் கலந்த அதிரடி திரைப்படம். படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டுள்ளார்.

விக்ரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் என்றும் கமலஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்களின் வரிசையில் விக்ரம் 2முதல் இடத்தை பிடித்துள்ளது .

Also Read: அதிக எதிர்பார்ப்புடன் வர இருக்கும் 6 படங்கள்.. விஜய், அஜித்தை ஓரம்கட்ட வரும் கமல்

இதனைத் தொடர்ந்து படங்களின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளிவர உள்ள டாப் 10 லிஸ்டில் மற்ற மொழி படங்களும் இடம்பிடித்துள்ளது. மாநகரம், பிரம்மாஸ்ரா, ஹிட் த செகண்ட கேஸ், பில்லா போன்ற படங்கள் வெளிவர உள்ளது.

- Advertisement -spot_img

Trending News