புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விஜய்க்கு மட்டுமே கொடுக்கப்படும் அல்வா.. மணிரத்னம் தலைமையில் கார்த்திக்கு பிரம்மாண்ட விழா

Thalapathy Vijay – Karthi: தளபதி விஜய் கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் நிறைய சோதனைகளை சந்தித்து வருகிறார். இவர் ஒரு படம் நடித்து அது ரிலீஸ் ஆவது என்பது பெரிய போராட்டமாக ஆகிவிட்டது. ஒவ்வொரு படத்திற்கும் எங்கிருந்துதான் சிக்கல் வரும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் ரிலீஸ்க்கு சில தினங்கள் இருக்கும்பொழுது பிரச்சனை கிளப்பப்பட்டு, அது இலவசமாக அவருடைய படத்திற்கு பிரமோஷன் ஆகவும் அமைந்துவிடுகிறது.

அதிலும் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் லியோ படம் கடந்து வந்த கசப்பான பாதை என்பது ரொம்பவே அதிகம். இன்றுவரை அந்த படத்தின் பஞ்சாயத்து முடிந்த பாடு இல்லை. ஒரு பக்கம் தயாரிப்பாளர் தரப்பு நான்கு மணி காட்சிக்கான அனுமதி கேட்க, ஒரு பக்கம் தமிழக அரசு முடியவே முடியாது என மறுத்து விட இன்று கோர்ட் வரைக்கும் இந்த சிக்கல் சென்று விட்டது.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானதுமே விஜய் புகை பிடிக்கிறார், போதை பழக்கத்தை ஆதரிக்கிறார் என ஒரு பக்கம் சர்ச்சை கிளம்பியது. அதிலும் லியோ டீசர் வெளியான பின்பு கேட்கவே வேண்டாம். விஜய் மாதிரி ஒரு டாப் ஹீரோ இப்படி ஒரு கெட்ட வார்த்தையை பேசி இருக்கக் கூடாது என மீடியாவுக்கு மீடியா பேச்சு போட்டியே நடத்திவிட்டார்கள். அதுவும் போதாது என்று அந்த வார்த்தை மியூட் செய்யப்பட்ட பிறகு கூட இந்த விஷயம் இன்னும் பேசு பொருளாக தான் இருக்கிறது.

அதிலும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் விஜய்க்கு மட்டும் தான் இதெல்லாம் நடப்பது போல் ஒரு சம்பவம் வெளியாகி இருக்கிறது. அதாவது லியோ பட இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருந்தது. அந்த விழாவுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடும் என ரத்து செய்தார்கள்.

அப்படி இருக்கும் பொழுது அதே ஸ்டேடியத்தில் தற்போது கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு அவரின் குருவான இயக்குனர் மணிரத்தினம் பங்கேற்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் பொழுதே ஜப்பான் படத்தின் டிரைலரையும் வெளியிட பட குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கான வேலைகளும் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

நடிகர் கார்த்திக்கும் ரசிகர்கள் அதிகம். அவர் நடித்த 75 சதவீதத்திற்கு மேலான படங்கள் வெற்றியை பெற்றிருக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் காவல்துறையால் பாதுகாப்பு கொடுக்கப்படுமா, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறாதா, விஜய்க்கு அல்வா கொடுத்துவிட்டு இப்போது கார்த்திக்கு இப்படி ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருப்பது விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.

Trending News