வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

பொண்டாட்டிக்காக செஞ்சீங்க, தம்பிய விட்டுடீங்களே சூர்யா சார்.. உபதேசம் எல்லாம் ஊருக்கு தானா?

Surya – Karthi: வாரிசு நடிகர்களாக களம் இறங்கும் நிறைய நடிகர்கள் ஜெயிப்பது என்பது சினிமாவில் மிகப்பெரிய சந்தேகம் தான். அந்த வகையில் புகழ்பெற்ற நடிகர் ஆன சிவகுமாரின் மகன் சூர்யா சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஜெயித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, அவருடைய தம்பி கார்த்தியும் சினிமாவுக்குள் வந்தார். அண்ணன் தம்பி இருவருமே தற்போது முக்கிய நடிகர்களாக மாறி இருக்கிறார்கள்.

சிவகுமாருக்கு மகன்கள் இரண்டு பேர், மருமகள் ஜோதிகா என அத்தனை பேரும் சினிமாவில் அவருடைய பெயரை காப்பாற்றி விட்டார்கள். இப்போதைக்கு கோலிவுட்டில் மரியாதைக்குரிய குடும்பம் என்ற பெயரில் இவர்கள் இருக்கிறார்கள். இந்த மொத்த இமேஜையும் சமீபத்தில் ஞானவேல் ராஜாவின் பேட்டி அசைத்துப் பார்த்திருக்கிறது.

Also Read:செல்ஃபி சிவக்குமாரை இழுத்ததால் முடிவுக்கு வந்த பருத்திவீரன் சர்ச்சை! பிளேட்டை திருப்பி போட்ட சம்பவம்

17 வருடங்களுக்கு முன் கார்த்தி பருத்திவீரன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்த ஒரு படம் தான் அவருக்கு இன்று வரை பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த படத்திற்கு பின்னால் நடந்த பஞ்சாயத்து வெளியில் தெரிந்த பிறகுதான், சிவகுமார் வீட்டில் நிலைமை எப்படி இருக்கிறது என்ற விஷயமும் வெளியில் தெரிந்திருக்கிறது.

கார்த்தியை டீலில் விட்ட சூர்யா

அமீர் மற்றும் அவர் ஆதரவாக இருந்த அத்தனை பேரும் சொன்ன கருத்தில் மொத்தமாக புரிந்தது கார்த்தி ஹீரோவாக அவருடைய அப்பா சிவக்குமாரோ அல்லது அண்ணன் சூர்யாவோ எந்த விதத்திலும் பண உதவி செய்யவில்லை. அதிலும் அமீர் பணம் போதவில்லை என்று சொன்னபோது சூர்யா பணம் இல்லை என்றால் படத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதாக தெரிகிறது.

சூர்யாவை திருமணம் செய்து 8 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். ஜோதிகாவை நடிக்க வைக்க சூர்யா தன்னுடைய சொந்த பணத்தை போட்டு படத்தை தயாரித்தார். தொடர்ந்து ஜோதிகாவை சினிமாவில் நடிக்க வைக்க 2d என்டர்டெயின்மென்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்கள் பண்ணினார்.

பொண்டாட்டியை நடிக்க வைக்க சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சூர்யா ஏன் 17 வருடங்களுக்கு முன் தம்பிக்காக அதை செய்யவில்லை. கூட்டுக் குடும்பம், மரியாதையான குடும்பம், ஒருவர் மேல் ஒருவர் அதீத அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதைப் போல் எல்லாம் மேடைக்கு மட்டும் தான் சிவகுமாரின் குடும்பம் காட்டிக் கொள்கிறதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்திருக்கிறது.

Also Read:பருத்திவீரன் படத்தில் ராமதாஸை கவனிச்சீங்களா.! எவ்வளவு பெரிய சம்பவத்தை செஞ்சுட்டு அசால்டா அமீர் சொன்ன பதில்

Trending News