நடந்து முடிந்த “Boxing Day” டெஸ்ட் போட்டியில் இந்தியா184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முடிந்த நான்கு போட்டிகளில் ஒரு போட்டி மட்டும் டிராவானது.
இந்த தோல்விக்கு இந்திய அணியின் சீனியர் வீரர்களின் பொறுப்பேற்ற ஆட்டமே காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் என யாரும் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் இந்திய அணியை எளிதாக வென்றது ஆஸ்திரேலிய அணி.
ஜனவரி 3ஆம் தேதி தொடங்கவிருக்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறது.இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முக்கிய பங்கு வகித்தார். மொத்தமாய் இரண்டு இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் 100 ரன்களையும் அடித்து வெற்றிக்கு உதவினார்.
ஆட்டநாயகன் விருது பெற்ற கேப்டன் பேக் கம்மின்ஸ், கடந்த போட்டியிலேயே நாங்கள் இந்திய அணியை வென்றிருப்போம். மழை வந்ததால் அவர்கள் தோல்வி தப்பியது. இல்லை என்றால் நாங்கள் எளிதாக இந்திய அணியை வீழ்த்தி இருப்போம் என மிக தெனாவட்டாக பேசியுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த உலகக்கோப்பை பைனலில் இந்தியாவை ஆஸ்திரேலியா அணி தோற்கடித்தது. அதன் பின் கோப்பையை வாங்கிய ஆஸ்திரேலிய அணியினர் அதை மிகவும் அவமதித்தனர். Dressing ரூமில் அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ், கோப்பையின் மீது கால்கள் இரண்டையும் தூக்கி வைத்து அவமதிக்கத்தக்க போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.