செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சிம்புவின் தோற்றம் வெட்கமாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது.. நம்பி ஏமாந்த பத்து தல இயக்குனர்

சிம்புவின் நடிப்பில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் கொரோனா தாக்கத்தின் காரணமாக இழுத்தடித்துக் கொண்டே சென்றது. தற்போது ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்த இயக்குனர் அடுத்த கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

ஆனால் அதிலும் அவருக்கு பல பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஏனென்றால் வழக்கம் போல சிம்பு இந்த படத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறாராம். அதாவது இப்படத்தில் கௌதம் கார்த்திக் தான் முதலில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகி இருந்தார். சிம்பு வெறும் கௌரவ தோற்றத்தில் வருவதாக தான் இருந்தது.

Also read: வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த சிம்பு.. பத்து தல படத்தால் படாத பாடுபடும் படக்குழு

ஆனால் மாநாடு திரைப்படத்தின் வெற்றியால் அவருடைய கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்டு இப்பொழுது அவரே ஹீரோவாக மாறிவிட்டார். அந்த வகையில் கௌதம் கார்த்திக் இரண்டாவது ஹீரோ என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இருப்பினும் இதன் படப்பிடிப்பு எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகவே நடந்திருக்கிறது. ஆனாலும் இயக்குனர் தற்போது தான் ஏமாற்றப்பட்டது குறித்து வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

அதாவது சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. அதன் காரணமாகவே இப்போது சிம்பு அதே தோற்றத்தில் இருந்து வருகிறார். இது பத்து தல திரைப்படத்திற்கு கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.

Also read: மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறுது.. மொத்த படக் குழுவையும் பரிதவிக்க விட்ட சிம்பு

இருந்தாலும் இயக்குனர் அந்த தோற்றத்திலேயே சிம்புவை வைத்து படத்தை முடித்திருக்கிறார். ஆனால் தற்போது அந்த தோற்றம் தனக்கு வெட்கமாகவும், ஏமாற்றமாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய பாஸ் என்றும் சிம்பு தன்னுடைய நண்பன் என்றும் கூறியிருக்கிறார். அதனால் தான் இந்த விஷயத்தை நான் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது அவர் சிம்புவிடம் எதையோ எதிர்பார்த்து ஏமாந்திருக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. மேலும் இயக்குனர் வேறு வழியில்லாமல் சிம்புவின் வெந்து தணிந்தது காடு தோற்றத்தை வைத்தே படத்தை முடித்து இருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் கூறி இருக்கும் இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also read: வா மோதி பார்க்கலாம் என கூறிய சூரி.. எதிர்பார்க்காத புது டிவிஸ்ட், சிம்புவுக்கு வந்த புதிய தலைவலி!

Trending News