செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

ரிலீசுக்கு முன்பே பல கோடி நஷ்டம் பார்த்த பத்து தல.. தயாரிப்பாளர் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பத்து தல. இப்படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்போது படத்திற்கான பிரமோஷன் தடபுடலாக நடந்து வருகிறது. சமீபத்தில் பிரம்மாண்டமாக இந்த படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது.

இந்நிலையில் பத்து தல படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி நஷ்டம் அடைந்ததாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது மாநாடு படத்திற்கு முன்பே பத்து தல படம் தொடங்கப்பட்டது. அப்போது சிம்பு சற்று குண்டாக காணப்பட்டார். அதன் பிறகு தான் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் ஒப்பந்தமானார்.

Also Read : அஜித்துக்கு தீனா படம் எப்படியோ அப்படித்தான் சிம்புவுக்கும் பத்து தல.. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு கிளப்பிய தயாரிப்பாளர்

இந்த படத்திற்காக உடல் எடையை சரமாரியாக குறைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பின்பு வெந்து தணிந்தது காடு படத்தில் சின்னப் பையன் போல காட்சியளித்தார். இந்நிலையில் பாதியிலேயே நிறுத்தப்பட்ட பத்து தல படம் மீண்டும் தூசி தட்டப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.

அப்போது புது பொலிவுடன் இருந்த சிம்புவை இயக்குனர் மீண்டும் குண்டாக மாறச்சொல்லி உள்ளார். இதனால் முன்பு இருந்தது போல எப்படி குண்டாக மாற முடியும் என்ற பயத்தில் ஓரளவு குண்டாக மாறினார். ஆனால் தயாரிப்பாளர் ரசிகர்கள் சிம்பு பழையபடி இருந்தால் ஏமாந்து விடுவார்கள்.

Also Read : பகிரங்கமாக கௌதம் மேனனிடம் கோரிக்கை வைத்த இளம் சீரியல் நடிகை.. சிம்புவையும் விட்டு வைக்கல

இப்போது உள்ள சிம்புவை வைத்தே மீதி காட்சிகளையும் எடுத்து விடலாம். மேலும் பழைய காட்சிகளை நீக்கி விட்டு மீண்டும் அதே காட்சிகளை சிம்புவை வைத்து எடுக்க சொன்னாராம். இதனால் முன்பு எடுத்த காட்சிகள் வீணாக போய் உள்ளது. எதற்காக செலவு செய்த 8 கோடியும் நஷ்டம் அடைந்துள்ளதாம்.

ஆனாலும் இப்போது பத்து தல படத்தின் முழுவதையும் பார்த்த தயாரிப்பாளர் திருப்தியாக உள்ளாராம். ஆரம்பத்திலேயே 8 கோடி நஷ்டம் அடைந்தாலும் வசூலில் பல மடங்கு லாபம் வந்து சேரும் என்ற கணக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளாராம். ஏனென்றால் படம் வேற லெவலில் வந்துள்ளதாம்.

Also Read : அவரை தூக்கிவிட தான் பத்து தல படத்துல நடிச்சேன்.. சிம்பு உங்களை தூக்கிவிட தான் ஏஆர் ரகுமான் வந்தார் தெரியுமா?

Trending News