ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

தக் லைஃபில் தீவிரம் காட்டும் மணிரத்னம்.. லுக்கில் பட்டையை கிளப்பும் சிம்பு, கமல்

Actor Kamal : நாயகன் படத்திற்குப் பிறகு கமலுடன் மணிரத்னம் இணைந்த படம் தான் தக் லைஃப். பொன்னியின் செல்வன் என்ற மெகா ஹிட் படத்திற்கு பிறகு மணிரத்னம் இந்த படத்தை எடுத்து வருகிறார். சமீபத்தில் மக்களவைத் தேர்தல் நடந்ததால் அந்தப் பிரச்சாரத்தில் கமல் ஈடுபட்டு வந்தார்.

இதனால் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாத நிலையில் தேர்தல் முடிந்தவுடன் தனது பணியில் இறங்கி இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர்.

தீவிரமாக நடக்கும் தக் லைஃப் படப்பிடிப்பு

thug-life-shooting
thug-life-shooting

மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்புவுடன் இணைந்து திரிஷா இந்த படத்தில் நடிக்கிறார். மேலும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மேர் பகுதியில் தக் லைஃப் படபிடிப்பு நடந்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட சிம்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜெய்சல்மேரில் சிம்பு

simbu-thug-life
simbu-thug-life

அதேபோல் கமலும் இப்போது தக் லைஃப் படப்பிடிப்புக்காக டெல்லி சென்று இருக்கிறார். அங்கு சூரிய உதயத்தின் போது மணிரத்னம் மற்றும் கமல் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் படி உள்ள புகைப்படமும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

டெல்லியில் மணிரத்னத்துடன் கமல்

mani-ratnam-and-kamal
mani-ratnam-and-kamal

மேலும் கமலின் இந்தியன் 2 படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாக உள்ளது. அதற்கான பணிகளில் இப்போது ஷங்கர் இறங்கி இருக்கிறார். கமலை மீண்டும் சேனாதிபதியாக பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

தக் லைஃப் படப்பிடிப்பில் மணிரத்னம்
mani-ratnam
maniratnam

அதோடு இப்போது தன்னுடைய அடுத்த படமான தக் லைஃப் படப்பிடிப்பிலும் கமல் தீவிரம் காட்டி வருகிறார். ஆகையால் மிக விரைவில் இந்தியன் 2, தக் லைஃப் என அடுத்தடுத்து கமலின் படங்கள் வெளியாகி ரசிகர்களை திக்கு முக்காட செய்ய வர உள்ளது.

Trending News