ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

கேள்விக்குறியாகும் ஆல்ரவுண்டர் இடம்.. தரமான வீரருக்கு அல்வா கொடுக்கும் பிசிசிஐ

ரோகித் சர்மா, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்திய அணி நிறைய வெற்றிகளை குவித்து வருகிறது. இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் தொடர் என அடுத்தடுத்து பல வெற்றிகளை எடுத்து சாதனை புரிந்தது.

ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா இருவரும் சேர்ந்து அடுத்து வரவிருக்கும் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை கட்டமைத்து வருகின்றனர். இதன் விளைவாக ஒவ்வொரு இளம் வீரர்களையும் பரிசோதித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர்  வெங்கடேஷ் ஐயர் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறார். இவர் ஆல்ரவுண்டர் இடத்தில் இருக்கிறார். அதிரடியாய் விளையாடக்கூடிய இவர் அபாரமாக பந்து வீசும் திறனையும் பெற்றுள்ளார்.

இவர் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு போட்டியாக இருக்கிறார் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் ஹர்திக் பாண்டியாவின் இடத்திற்கு போட்டி நிலவுகிறது என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, ஹர்திக் பாண்டியா முழு உடல் தகுதி பெற்றுவிட்டால் அவருக்கு ஈடு இணை வீரரே கிடையாது. அவர் தான் இந்திய அணியின் முதல் தேர்வாக இருக்கும்.

ஹர்திக் பாண்டியா, ஃபார்மிற்கு திரும்பும் பட்சத்தில் இந்திய அணி வெங்கடேஷ் ஐயரை கழட்டி விட்டுவிட்டு, ஹர்திக் பாண்டியாவிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஆகவே வெங்கடேஷ் ஐயரின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறிதான் என்று கூறுகின்றார்.

Trending News