2025 ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் நவம்பர் 29ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஆண்டைபோன்று இந்த வருடமும் 10 அணிகள் பங்கு பெறுகின்றது. ஒவ்வொரு அணியின் சார்பிலும் 25 வீரர்களின் பெயர்கள் பட்டியல் இடப்பட்டது இந்த ஏலத்தில் 33 இன்டர்நேஷனல் வீரர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டது.
பலவீரர்கள் தங்களின் மோசமான நடத்தையால், கண்டு கொள்ளப்படாமல் போவார்கள். அப்படி இளம் வயதிலே பல வீரர்கள் தங்கள் கேரியரை இழந்துள்ளனர். குறிப்பாக நல்ல திறமை இருந்தும் அதிக கோபம் மற்றும் பொறுமை இல்லாமல் செயல்படுவதால் பல அணிகள் அத்தகைய வீரர்களை ஏலத்தில் வாங்க முன் வர விரும்புவதில்லை.
அடுத்த சச்சின், சேவாக் என்று இளம் வீரர் ஒருவரை குறிப்பிட்டு வந்தனர். அவரும் வந்த புதிதில் தன்னுடைய அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி வந்தவர் பிரதிவ் ஷா. 75 லட்சம் என அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்ட போதிலும் அவரை யாரும் வாங்க முன்வரவில்லை.
நன்றாக விளையாடினாலும் யார் பேச்சையும் அவர் கேட்பதில்லையாம். அவர் இஷ்டம் போல் செயல்படக்கூடிய வீரர் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப்பும், பிசிசிஐ நிர்வாகிகளும் தெரிவிக்கின்றனர். எந்த ஒரு விஷயத்தையும் பொறுமையுடன் செயல்படாததால் அவரை எந்த ஒரு அணியும் வாங்கவில்லை.
மும்பையை பூர்வீகமாகக் கொண்ட இவரை சச்சின் டெண்டுல்கர் பலமுறை அழைத்து அறிவுரை கூறியுள்ளார்.19 வயதில் இந்திய அணிக்காக 2018 ஆம் ஆண்டு தேர்வானார். இந்திய அணிக்காக ஆறு ஒரு நாள் போட்டிகளிலும், ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.2021ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணிக்காக இவர் விளையாடவில்லை. இவரின் மோசமான ஆட்டிட்யூடால் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.