புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய தகுதியுள்ள 5 நட்சத்திர வீரர்கள்.. யோசிக்கும் படி செய்த வயது

இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட சில நட்சத்திர வீரர்கள், தங்கள் திறமையை மீண்டும், மீண்டும் நிரூபித்து எங்களுக்கு இந்திய அணியில் இடம் இல்லையா? என்பது போல் கதவைத் தட்டி வருகின்றனர். அப்படி சமீபத்தில் இந்திய அணியில் இவரை சேர்க்கலாம் என்று யோசிக்கும் படி அதிரடியாக விளையாடி வரும் 5 வீரர்களை இதில் பார்க்கலாம்.

1. தினேஷ் கார்த்திக்: ஒரு காலத்தில் இந்திய அணி இவரை ஓரங்கட்டியது. மகேந்திர சிங் தோனி வருகைக்குப் பின் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்காமல் திணறி வந்தார். இப்பொழுது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் மனிதன் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார். நிச்சயமாக இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

2. ராபின் உத்தப்பா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஓபனிங் களமிறங்கி அதிரடியாக ஆடக்கூடிய வீரர் உத்தப்பா.இன்று வரை ஓய்வை பற்றி யோசிக்காத உத்தப்பா தொடர்ந்து கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் தன் திறமையை நிரூபித்து அசத்தி வருகிறார். இவரையும் இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

3.ஷிகர் தவான்: சமீபத்தில் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2-3 வருடங்களாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வந்த இவர் இப்பொழுது அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளார். இவருக்கும் மீண்டும் வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் கலக்கி வருகிறார்.

4.அம்பத்தி ராயுடு: தன்முன் கோபத்தினால் நிறைய நடுவர்களிடம் பிரச்சினை செய்துள்ளார் அம்பத்தி ராயுடு. ஆனால் இவரும் ஒரு திறமைவாய்ந்த அதிரடி வீரர். ஐபிஎல் போட்டிகளில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இன்று வரை தனது ஆட்டத்தில் ஆக்ரோஷம் குறையாமல் கலக்குகிறார் அம்பத்தி ராயுடு. இவருக்கும் அணியில் வாய்ப்பு அளித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

5. ராகுல் திருபாட்டி: இவரும் ஒரு திறமைவாய்ந்த அதிரடி ஆட்டக்காரர். ஆரம்பத்திலிருந்தே இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

Trending News