புதன்கிழமை, ஜனவரி 8, 2025

பொன்னியின் செல்வனால் லைக்காக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்.. சுத்தி போட்ட ஸ்கெட்ச், பதட்டத்தில் சுபாஸ்கரன்

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் லைக்கா நிறுவனம் படத்தை தயாரிக்க கடுமையான எதிர்ப்பு நிலவியது. அதன் பிறகு சமீப காலமாக லைக்கா தனது ஆணித்தரமான அஸ்திவாரத்தை தமிழ் சினிமாவில் போட்டு உள்ளது. பெரிய நடிகர்களின் படம், பிரம்மாண்ட படம் என்றாலே லைக்கா தான் தயாரிக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் மாபெரும் வசூலை அள்ளிய பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை மணிரத்தினத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்போது இந்தியன் 2, சந்திரமுகி 2 ஆகிய படங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.

Also Read : விடாமுயற்சி படத்தின் கதாநாயகி யார்? வரிசையாக 5 நடிகைகளை களமிறக்கியுள்ள லைக்கா

மேலும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தையும் லைக்கா தயாரிக்கிறது. அடுத்ததாக அஜித்தின் விடாமுயற்சி மற்றும் ரஜினி, ஜெய் பீம் ஞானவேல் கூட்டணியில் உருவாகும் படத்தை லைக்கா தயாரிக்க இருக்கிறது.

இவ்வாறு தனது வளர்ச்சியை அதிகப்படியாக்கி கொண்டிருக்கும் லைக்கா நிறுவனத்திற்கு பெரிய சோதனை இப்போது ஏற்பட்டுள்ளது. அதாவது இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இப்போது அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். அதாவது சட்ட விரோத பரிவர்த்தனை, வருமான வரி ஏய்ப்பு ஆகியவை லைக்கா நிறுவனம் செய்திருப்பதாக சந்தேகப்பட்டு தற்போது சோதனையை நடத்தி வருகிறார்கள்.

Also Read : விடாமுயற்சிக்கு சம்பளத்தை வாரி வழங்கிய லைக்கா.. 2வது இடத்திற்கு முன்னேறிய அஜித்

அதன்படி சென்னை தியாகராய நகர், காரப்பாக்கம், அடையார் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துகின்றனர். மேலும் கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் லைக்கா நிறுவனத்தில் சோதனை நடத்துவது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான காரணம் என்னவென்றால் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் அதிக வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளதால் அதற்கான சோதனையை நடத்தி வருகிறார்கள். இதனால் லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன் மிகுந்த பதட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.

Also Read : லைக்காவை டீலில் விட்ட விஷால்.. நண்பர்களால் திருப்பி அடிக்கும் கர்மா

Trending News