மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்திற்கு மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழ் சினிமாவில் இது போன்ற வரலாற்று நாவலை படமாக எடுக்க பல இயக்குனர்களுக்கு முன்னுதாரணமாக தற்போது மணிரத்தினம் உயர்ந்துள்ளார்.
அவ்வாறு பொன்னியன் செல்வன் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல் நாளே பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 80 கோடி வசூல் செய்திருந்தது. இந்நிலையில் இரண்டாவது நாள் முடிவில் 150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
Also Read : ஜெயராம் குறித்து அவிழ்த்துவிட்ட மகள்.. பொன்னியின் செல்வன் படத்திற்காக இவ்வளவு மெனக்கெட்டுருக்காரா!
மேலும் நேற்று விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக வசூல் இரட்டிப்பாக கூடும் என எதிர்பார்த்த நிலையில் அதே போல் அதிகபடியான வசூலை வாரி குவித்துள்ளது. அஜித்தின் வலிமை மற்றும் கமலின் விக்ரம் படங்களைத் தவிர தமிழ்நாட்டில் வெளியான அனைத்து படங்களின் வாழ்நாள் வசூலை பொன்னியின் செல்வன் படம் மூன்றே நாட்களில் முறியடித்துள்ளது.
அதாவது நேற்று மூன்றாவது நாள் முடிவில் பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் 230 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு பேர் ஆதரவு கிடைத்து வருகிறதாம். குறிப்பாக அமெரிக்காவிலும் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
Also Read : பொன்னியின் செல்வனுக்காக கொண்டுவரப்பட்ட தங்க நகைகள்.. பார்த்து பார்த்து செதுக்கிய மணிரத்தினம்
மேலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால் மிகக் குறுகிய காலத்திலேயே போட்ட பட்ஜெட்டை மணிரத்தினம் எடுக்க உள்ளார். மேலும் எப்படியும் ஆயிரம் கோடி வசூலில் பொன்னியின் செல்வன் படம் இணையும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்ட வருகிறது.
ஒரு தமிழ் நாவலை மக்கள் இந்த அளவுக்கு கொண்டாடி வருவதால் பல இயக்குனர்கள் இதே போன்ற நாவலை படமாக எடுக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை மட்டும் படமாக எடுக்க உள்ளதாக கூறியிருந்தார்.
Also Read : பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பது சாபக்கேடு.. வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்