திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

குந்தவைக்கு கோடிகளை வாரிக்கொடுக்கும் தயாரிப்பாளர்.. மொத்தமாக 100 நாட்களுக்கு வாங்கிய பெருந்தொகை

நடிகை த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு பிறகு துபாய், இத்தாலி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சுற்றுலாவில் எடுக்கும் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ட்ரெண்டாகி கொண்டிருக்கும் குந்தவைக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

தமிழக இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த த்ரிஷாவிற்கு, கடந்த 10 வருடங்களாகவே சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றிப்படங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தேர்ந்தெடுத்து நடித்தும் வெற்றிப்பெறாமல் போனது. சொல்லப்போனால் 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு பெரிய படங்கள் எதுவும் அமையவில்லை.

Also Read: நந்தினி, குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகைகள்.. சிஷ்யைக்கு சிபாரிசு செய்த மணிரத்னம்

இந்த நேரத்தில் த்ரிஷாவுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான் இயக்குனர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் த்ரிஷா சோழ நாட்டு இளவரசி இளைய பிராட்டி குந்தவை நாச்சியார் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கேரக்டர் அந்த படத்தின் முக்கிய ரோல். இதனாலேயே த்ரிஷாவின் மீது ரசிகர்களின் பார்வை அதிகமாக இருந்தது.

பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்தே மீண்டும் ட்ரெண்ட் ஆனார் நடிகை த்ரிஷா. சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார். டாப்பில் இருக்கும் ஹீரோயின்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு மீண்டும் ட்ரெண்ட் ஆகிவிட்டார் த்ரிஷா. மீண்டும் படவாய்ப்புகளும் வர ஆரம்பித்து விட்டன.

Also Read: விஜய்க்கு மனைவியாக நடிக்கும் அழகு நடிகை.. வில்லியாக களமிறங்கும் சமந்தா

த்ரிஷா இப்போது தளபதி 67 ல் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் த்ரிஷாவுக்கு மூன்று கோடி சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. படப்பிடிப்பு ஆரம்பித்தால் பிரேக் எடுக்க முடியாது என்பதாலேயே இப்போது சுற்றுலா சென்று இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும்.

இந்த படத்தில் த்ரிஷா தான் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் லலித் அவருக்கு பல கோடிகளை சம்பளமாக வழங்கியுள்ளார். த்ரிஷாவின் இந்த திடீர் அதிர்ஷ்டத்திற்கு காரணம் அவர் நடித்த குந்தவை ரோல் தான். விக்னேஷ் சிவன் இயக்கும் அஜித்தின் 62 வது படத்திலும் த்ரிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

Also Read: பொன்னியின் செல்வன் விழாவில் சேட்டை செய்த சித்தார்த்.. அரங்கத்தை திரும்பிப் பார்க்க வைத்த திரிஷா

Trending News