வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்.. சோழ சாம்ராஜ்யத்தை பெருமைப்பட வைத்த மணிரத்னம்

எம்ஜிஆர், கமல் போன்ற பிரபலங்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயன்றும் முடியாமல் போனது. ஆனால் மணிரத்தினம் அந்த கனவை தற்போது நினைவாக்கியுள்ளார். மிகப்பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியன் செல்வன் படத்தை எடுத்து முடித்துள்ளார்.

அதாவது லைக்காவுடன் கைகோர்த்து மணிரத்தினம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையை பொன்னியின் செல்வன் படம் பல சாதனைகளை படைக்கும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது.

Also Read :ரிலீசுக்கு முன்பே பல கோடி லாபம் பார்த்த மணிரத்தினம்.. பொன்னியின் செல்வனை கைப்பற்றிய நிறுவனம்

பொன்னியின் செல்வன் நாவல் மிகப்பெரிய கதை. இதில் ஒரு கதாபாத்திரத்தையே ஒரு முழு படமாக எடுக்கலாம். ஆனால் மணிரத்தினம் இந்த நாவலின் மொத்த கதையையும் இரண்டு பாகங்களாக எடுத்த முடித்துள்ளார். இதுவே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி மணிரத்தினம் இல்லாமல் வேறு இயக்குனர்கள் இப்படத்தை எடுத்திருந்தால் இவ்வளவு விஷயங்களை சேகரித்து எடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். மேலும் மணிரத்னம் நினைத்திருந்தால் பொன்னியின் செல்வன் படத்தில் எல்லா மொழி நடிகர்களை நடிக்க வைத்திருக்கலாம்.

Also Read :வளர்த்துவிட்ட குருவை பதம் பார்த்த 2 ஹீரோக்கள்.. வாய்ப்பு கொடுக்காமல் கழட்டிவிட்ட மணிரத்தினம்

ஆனால் மற்ற மொழி பிரபலங்களை சில கதாபாத்திரங்களுக்கு மட்டும் தேர்வு செய்து விட்டு பெரும்பாலும் தமிழ் நடிகர், நடிகைகளை நடிக்க வைத்திருந்தார். மேலும் பாகுபலி படம் போல் இந்த படத்தில் ஹீரோயிசம் இருக்காது என மணிரத்தினம் கூறியுள்ளார்.

ஏனென்றால் அனைத்து கதாபாத்திரங்களுக்கு சரியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சோழ சாம்ராஜ்யத்தை பெருமைப்படுத்தும் விதமாக பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார் மணிரத்தினம். இதனால் இப்படம் பல சாதனைகளை முறியடிக்கும்.

Also Read :பொன்னின் செல்வன் படத்தில் தளபதி விஜய், மகேஷ்பாபு.. செதுக்கி வைத்திருந்த மணிரத்தினம்

Trending News