திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அமீரை கொச்சைப்படுத்திய ஞானவேலுக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து குத்திய பொன்வண்ணன்.. உச்சகட்ட அவமானம்

Aamir- Gnanavel Raj Issue: பிரபல இயக்குனர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வைத்த குற்றச்சாட்டுகள் இப்போது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பலரும் ஞானவேல் ராஜாவை கண்டித்து வரும் நிலையில், பிரபல இயக்குனரும் நடிகருமான பொன்வண்ணன் நல்லாவே ஊமை குத்து குத்தி விட்டார்.

சமீபத்தில் நடந்த கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் அழைக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் கார்த்தியை திரை உலகில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது அமீர் தான். இந்த விஷயத்தில் தேவை இல்லாமல் தயாரிப்பது ஞானவேல் ராஜா தலையிட்டு அமீரை குறித்தும், அவர் பண மோசடி செய்ததாகவும் பேசி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

ஆனால் அமீர் பருத்திவீரன் படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று பிரபல இயக்குனர்களான சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்டோர் பேசியதோடு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவையும் கழுவி கழுவி ஊற்றினார்கள். இப்போது பருத்திவீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Also read: அமீருக்காக குரல் கொடுத்த சமுத்திரக்கனி.. நட்புனா இப்படித்தான் இருக்கணும்

ஞானவேல் ராஜாவை வெளுத்து வாங்கிய பொன்வண்ணன்

‘பருத்திவீரன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கிய போது, அமீர் அவர்கள் பொறுப்பேற்று பல நண்பர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார். இவற்றையெல்லாம் நான் அறிவேன். நானும் சமுத்திரக்கனியும் செலவுகளை சுட்டிக்காட்டி பேசிய போதெல்லாம் எங்களை அமீர் சமாதானப்படுத்துவார். பணத்திற்காக தனது படைப்புக்கு துரோகம் செய்பவர் அல்ல அமீர். இதெல்லாம் அவருடன் பணிபுரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஒரு நல்ல படைப்பாளியை தன்னுடைய தனிப்பட்ட காரணத்திற்காக திருடன், வேலை தெரியாதவன் என்று கொச்சைப்படுத்துவது சரியல்ல. சமீபத்தில் ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில் உடல் மொழியும் பேச்சும் திமிருத்தனமாக இருந்தது. அதிலும் இவருடைய தயாரிப்பில் வந்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து, பருத்திவீரனையும் அந்த படைப்பாளியையும் எடை போட்டு விட்டீர்களோ, இந்த தரம் தாழ்ந்த மனநிலை வேண்டாம்’ என்று இயக்குனரும் நடிகருமான பொன்வண்ணன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல அமீர் கூட சமீபத்திய பேட்டியில் சிவகுமாரின் குடும்பத்தினுடன் தனக்கு நல்ல நட்பு இருந்ததாகவும், அது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் மூலம் தான் கெட்டுவிட்டது என்றும் கூறியிருந்தார். இப்போது பொன்வண்ணன் வெளியிட்ட இந்த அறிக்கை சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

Also read: திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்கும் சூர்யாவின் குடும்பம்.. ஞானவேல் ராஜாவின் நரி தந்திரம்

Trending News