வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அதெல்லாம் பேசக்கூடாது, நீ ஏன் அதை சொல்ற.? ஆண்டவர் தலையை உருட்டும் பூர்ணிமா

Poornima-Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாயாவுக்கு அடுத்தபடியாக வெறுப்பை சம்பாதித்திருக்கும் போட்டியாளர் பூர்ணிமா தான். இவரை இந்த பெயர் சொல்லி அழைப்பதை விட புறணிமா என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும்.

அந்த அளவுக்கு ஊர் கிழவி போல் மாயாவிடம் ஏதாவது ஒரு புறணி பேசிக் கொண்டிருப்பார். அதில் இந்த முறை சிக்கியது ஆண்டவர் தான். கடந்த வாரம் பூர்ணிமாவை கமல் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ரோஸ்ட் செய்து கடுப்பேற்றினார்.

அந்த கடுப்பில் இருந்த பூர்ணிமா இப்போது மாயாவிடம் பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் கமல் பெயரை குறிப்பிடாமல் எதுவுமே பேசாம வீட்ல இருக்கணும்னா எப்படி முடியும்? வீட்ல யாரு இருக்கணும்? யாரு போகணும்னு பேச கூடாதுன்னு நீங்க ஏன் சொல்றீங்க?.

Also read: கண்ணீர் கடலில் தத்தளிக்கும் பிக்பாஸ் வீடு.. கேம் சேஞ்சராக வரும் உறவுகளால் மாறுமா ஆட்டம்.?

இதெல்லாம் நாங்க கெஸ் பண்ணி விளையாடுவது. அத கூட சொல்ல கூடாதுன்னா வாய்க்கு ஜிப்பு தான் போடணும் என அவர் நடித்துக் காட்டி நக்கல் அடித்துள்ளார். இதன் மூலம் அவர் ஆண்டவரை மறைமுகமாக தாக்கி பேசி இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

ஏற்கனவே ஒரு முறை கமல் இவரை வார இறுதி நாளில் பயங்கரமாக கலாய்த்து தள்ளி இருந்தார். அப்போதும் கூட பூர்ணிமா இப்படித்தான் குடிகார அங்கிள் என்று பேசி ஆண்டவர் மேல் இருக்கும் தன் வன்மத்தை தீர்த்துக் கொண்டார். அதைத்தொடர்ந்து இப்போதும் அதே வேலையை தான் அவர் பார்த்திருக்கிறார்.

பொதுவாக பூர்ணிமாவுக்கு அவரைப் பற்றி யாரும் குறை சொன்னால் உடனே கோபம் தலைக்கு மேல் ஏறிவிடும். அதில் கமலும் விதிவிலக்கல்ல என்பது இந்த வீடியோவில் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் ஆண்டவர் இந்த வாரமும் பூர்ணிமாவுக்கு மண்டகபடியை நடத்துவார் என்பது மட்டும் உறுதி.

Also read: பிக்பாஸில் சம்பளத்துடன் ஹனிமூன் கொண்டாடும் ஜோடி.. கொளுத்திப்போட்ட வத்திக்குச்சி வனிதா

Trending News