செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

தளபதி 67 படத்தில் வில்லியாகவும் சாக்லேட் நடிகை.. ஜோடி போட்ட நடிகையை சோதிக்கும் லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் தளபதி 67 படத்தில் பிரபல நடிகை ஒருவர் வில்லியாக களமிறங்குகிறார். தமிழ் சினிமாவில், அமுல் பேபி என்று பெயரெடுத்தவர், அந்த ரோலுக்கு செட் ஆவாரா என்பது தான் இப்பொழுது பல பேரின் கேள்வியாக இருந்துவருகிறது.

தளபதி 67-ல் ஆச்சரியப்படுத்தும் வகையில் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்த படத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் உற்றுப் பார்க்கும் வகையில் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளனர்.

விஜய்க்கு எதிராக இந்த படத்தில் நீலாம்பரி போன்று ஒரு வெயிட்டான வில்லி கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் அந்த நடிகை. சமீபத்தில் விவாகரத்தாகி அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், சந்தோசமாக வாழ்ந்து வருபவர் சமந்தா. இப்பொழுது இவர் ஹாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

சொல்லப்போனால் விவாகரத்துக்குப் பின் தான் அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் போட்ட ஐட்டம் நடனம், நடிகையை வேறு இடத்திற்கு கொண்டு சென்றது.

தளபதி 67 படத்தில் ஹீரோயினாக, பிரியங்கா மோகனை நடிக்க வைப்பதற்காக அவரிடம் பேசி வருகின்றனர். ஆனால் படத்தில் வில்லியாக சமந்தா கன்ஃபார்ம் ஆகியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பார்ப்பதற்கு அமுல் பேபி, சாக்லேட் குழந்தையாக இருக்கும் சமந்தா, நீலாம்பரி போன்று ஒரு சவாலான கேரக்டரில் எப்படி நடிப்பார் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.

எப்போதுமே சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் வரலட்சுமி சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், திரிஷா போன்றோர்கள் மத்தியில் இப்பொழுது சமந்தாவும் இணைகிறார் என்பது தமிழ் சினிமா எடுக்கும் புதுமுயற்சி.

Advertisement Amazon Prime Banner

Trending News