புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிம்பு படத்தில் இணைந்துள்ள பிரபல நடிகரின் மனைவி.. திருமணம், குழந்தைக்கு பின் ரீ என்ட்ரி கொடுக்கும் ஹீரோயின்

நடிகர் சிம்புவுக்கு மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் நடிகர் சிம்புவுக்கு நிஜமாகவே ஒரு கம்பேக் திரைப்படமாக அமைந்தது.

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு பத்து தல திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் கன்னடத்தில் ரிலீசாகி வெற்றி பெற்ற மப்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். மணல் கடத்தும் தாதாவாக இந்த படத்தில் சிம்பு நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் கௌதம் மேனன், நடிகர் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

Also Read: நடிகர்கள், இயக்குனர்களாக அவதரித்த 5 பிரபலங்கள்.. வல்லவனாக மாறிய சிம்பு

இந்த பத்து தல திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஏ.ஜி. ராவணன் என்னும் கேரக்டரில் சிம்புவின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்து இருக்கிறது. சிம்புவை தாண்டி இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகையின் காட்சிகள் இன்னுமே ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாகவே அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். ஏனென்றால் படம் தொடங்கப்பட்டதிலிருந்து டீசர் வெளியிடும் வரை இந்த நடிகை அந்த படத்தில் இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது.

ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்த திலீப் குமாரின் பேத்தியாக சினிமா உலகுக்கு அறிமுகமானவர்தான் நடிகை சாயிஷா. ஆனால் தற்போது இவரை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் நடிகர் ஆர்யாவின் மனைவி என்றுதான் சொல்ல வேண்டும். இவர் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் சினிமாக்களில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார்.

Also Read:என்னால எத்தனை பேரு செத்தானு தெரியாது, எத்தன பேர வாழ்ந்தானு தெரியாது.. பதற வைத்த பத்து தல டீசர்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட சாயிஷா அதன் பின்னர் திரைப்படங்களில் நடிக்கவில்லை. சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்த சாயிஷா, சில மாதங்களுக்கு முன்பில் இருந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவர் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சிம்புவின் பத்து தலை திரைப்படம் சாயிஷாவுக்கு ரீ என்ட்ரி திரைப்படம் ஆக அமைந்திருக்கிறது. கன்னியாகுமரியை சேர்ந்த மணல் கடத்தும் தாதாவாக சிம்பு இந்த படத்தில் நடித்திருக்கிறார். கௌதம் மேனன் அரசியல்வாதியாகவும், கௌதம் கார்த்திக் அடியாள் போலவும், ப்ரியா பவானிசங்கர் அதிகாரி போலவும் இந்த டீசரில் காட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் சாயிஷா ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

Also Read: தனுஷ், சிவகார்த்திகேயனின் ஆணிவேரை பிடுங்கிய சிம்பு.. இனி எல்லாமே பத்து தல ஆட்டம் தான்

 

Trending News