ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

டிஆர்பி-யில் கலக்கும் டாப் 6 சீரியல்கள்.. சிங்கப் பெண்ணால் ஆட்டம் கண்ட பிரபல சேனல்

This Week Top 6 Serials TRP Ratings: ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர் என்பது அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

இதில் 10-வது இடத்தில் விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலும், 9-வது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியலும், 8-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும் உள்ளது. 7-வது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலும், 6-வது இடத்தில் சன் டிவியின் இனியா சீரியல் இருக்கிறது. இந்த சீரியலில் கொஞ்ச நாட்களாக இனியாவை பாசமாக பார்த்துக் கொள்ளும் கணவனாக இருந்த விக்ரம், இப்போது மறுபடியும் இனியாவை டார்ச்சர் செய்ய துவங்கி விட்டார்.

இதன் தொடர்ச்சியாக 5-வது இடம் கலெக்டராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரிக்கு கிடைத்திருக்கிறது. 4-வது இடத்தில் எதிர்நீச்சல் உள்ளது. இதில் குணசேகரன் இப்போது ஈஸ்வரியை வைத்து காய் நகர்த்தும் விறுவிறுப்பான கதைக்களம் தான் எதிர்நீச்சல் சீரியலில் ஒளிபரப்பாகிறது. அதேசமயம் சாருபாலா அப்பத்தா கேஸ் விஷயத்தில் தீவிரமாக செயல்படுகிறார்.

இதைத்தொடர்ந்து 3-வது இடத்தில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை காண்பித்துக் கொண்டிருக்கும் வானத்தைப் போல சீரியல் உள்ளது. இதில் சின்ராசு தன்னுடைய தங்கை துளசிக்காக படும் பாடு பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

Also Read: கோபியையும் மாமியையும் புலம்ப விடும் பாக்யா.. மறு திருமணத்திற்கு சப்போர்ட் செய்யும் சக்காளத்தி

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட்

2-வது இடத்தில் கயல் சீரியல் உள்ளது. இதில் கயல் பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு எப்படி வெளி வருவது என தெரியாமல் எழிலிடம் அழுது புலம்புகிறார். கயல் மட்டுமல்ல இந்த சீரியலை பார்ப்பரையும் டென்ஷன் ஆக்குகின்றனர். இருக்கிற பிரச்சனையே முடியல அதுக்குள்ள புது வில்லனையும் வரிசையாக தரை இயக்கிக் கொண்டிருக்கின்றனர்.

முதல் இடத்தில் சன் டிவியின் சிங்க பெண்ணே என்ற புத்தம் புது சீரியல் உள்ளது. இதில் கதாநாயகி ஆனந்தி, தான் பணி புரியும் இடத்தில் நடக்கும் தவறை சுட்டி காட்டி, அந்த இடத்தில் தனக்கென இருக்கும் தரத்தை உயர்த்திக் கொண்டார். எந்த தப்பும் செய்யாத அன்பு பழியை சுமந்து கொண்டிருப்பதால் இனி வரும் நாட்களில் ஆனந்திக்கு அது கொஞ்சம் கொஞ்சமாக தெரியவரும்.

அதேசமயம் ஆனந்தியை கடத்தல் கும்பல்களிடமிருந்து காப்பாற்றியதோடு காதலிக்கவும் துவங்கி விட்டார் மகேஷ். இவர் மட்டுமல்ல அன்புவும் ஆனந்தியை விரும்புவதால், இவர்கள் இருவருள் யாரை ஆனந்தி விரும்புவார் என்பதுதான் சஸ்பென்ஸ் ஆக வைத்துள்ளனர். அதேபோல் இனி ஆனந்தி வேலை பார்க்கும் கார்மெண்ட்ஸை, தன்னுடைய பொறுப்பில் மகேஷ் எடுத்து நடத்தி பிசினஸில் மட்டுமல்ல காதலையும் டெவலப்மெண்ட் பண்ணப் போகிறார்.

Also Read: ஜான்சி ராணியை ரவுண்டு கட்டி வெளுத்த மருமகள்கள்.. ஜனனி விரித்த வலையில் சிக்கிய குணசேகரன்

Trending News