புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் காமெடி நடிகர்.. அடக்கடவுளே! இப்படியும் ஒரு சோதனையா?

எஸ் கே 20 சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படம். இந்த படத்தின் சூட்டிங் சித்தூர் மட்டும் ஆந்திராவில் படு விரைவாக நடந்து வருகிறது. இந்த படத்தை எவ்வளவு விரைவாக எடுத்து முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடியுங்கள் என்று சிவகார்த்திகேயன் கட்டளை இட்டிருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது இந்த படம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 20 ஆவது படம் . இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர் சத்யராஜ், அவருக்கு அப்பா வேடத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த வெளிநாட்டு மாடல் அழகி ஒருவர் ஹீரோயினாக நடிக்கிறார். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியாராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இப்பொழுது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல காமெடி நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கிறார். ஆனால் இவரை மக்கள் திரையில் பார்த்தாலே சிரித்து விடுவார்கள். இவரா, இவர் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவரா என்ற கேள்வி பலர் மனதிலும் எழுகிறது.

இந்தப்படத்தில், வெங்கட்பிரபுவின் தம்பி பிரேம்ஜி சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார். இதை கேட்டால் வெங்கட்பிரபுவே விழுந்து விழுந்து சிரித்து விடுவார்.

“என்ன கொடுமை சரவணன் இது” என்று சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பிரேம்ஜியை கலாய்த்து வருகின்றனர். பிரேம்ஜி வில்லனாக நடிப்பது அவருக்கே காமெடியாக இருக்கும். அவரை ரசிகர்கள் வில்லனாக ஏற்றுக்கொள்வார்களா என்பது பெரும் சந்தேகம் தான்.

Trending News