ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

11 வருட பகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அஜீத்.. மெகா கூட்டணியில் உருவாகும் AK-63

வலிமை திரைப்படத்தை அடுத்து அஜீத் மீண்டும் போனிகபூர், வினோத் கூட்டணியில் உருவாகும் ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு பிறகு அஜீத் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தன்னுடைய 62வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை பிரபல நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. முதலில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருந்தது.

ஆனால் நயன்தாரா தான் அஜித்திடம் பேசி லைக்கா நிறுவனத்தை தயாரிக்க வைத்துள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் எப்படியாவது அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறது.

ஆனால் அதற்கான வாய்ப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு அஜித் மற்றும் சன் டிவிக்கு இடையே சில முட்டல், மோதல்கள் இருந்து வந்தது. இதனால் அஜீத் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு படம் நடிக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் சன் டிவி அஜித்தை கூல் செய்யும் விதமாகத்தான் அவர் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை பெற்றதாகவும் ஒரு பேச்சு உண்டு. இதனால் எப்போது இந்த கூட்டணி இணையும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் இருக்கிறது.

தற்போது அஜீத் தன் கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. சிறுத்தை சிவா ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி இருந்தார். அதன் அடிப்படையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பை கைப்பற்றும் என்று தெரிகிறது.

இதனால் அஜித் சன் பிக்சர்ஸ் விரிக்கும் வலையில் சிக்குவாரா மாட்டாரா.? ஏற்கனவே மங்காத்தா படம் எடுத்து கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஆகிவிட்டது அதற்குப்பின் சன்பிக்சர்ஸ் கூட்டணியில் அஜீத் சேரவே இல்லை. வலுக்கட்டாயமாக தனது கொள்கையை ஓரம் கட்டிக்கொண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News