கொலைவெறியில் கமல்.. ரிலீஸ் தேதியை மிரட்டலாக வெளியிட்ட விக்ரம் படக்குழு

உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அஞ்சாதே நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சிவானி, காயத்ரி சங்கர், மைனா நந்தினி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. தற்போது விக்ரம் படத்தின் போஸ்டர் உடன் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாகவே கமலஹாசன் கையில் துப்பாக்கியை வைத்து இருக்கும் போஸ்டர் வெளியாகி இருந்தது.

தற்போது ஒருவரை கத்தியால் குத்தி முகத்தில் ரத்தக்கறையுடன் உள்ள கமலஹாசனின் புகைப்படத்தை விக்ரம் படத்தின் படக்குழு வெளியிட்டுள்ளது.மேலும், விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

சமீபகாலமாக உதயநிதி ஸ்டாலின் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றி வருகிறார். விஷ்ணு விஷாலின் எப்ஐஆர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல 2 காதல் படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில் தற்போது கமலஹாசனின் விக்ரம் படத்தையும் கைப்பற்றியுள்ளது. விக்ரம் படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் போஸ்டர் மூலம் இப்படத்தில் சண்டைக்காட்சிகள் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vikram movie poster
vikram movie poster
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →