கோலிவுட்டில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் கார்த்தி.ஒவ்வொரு படத்திலும் தனது கேரக்டருக்கு ஏற்றவாறு கெட்டப்பையும் நடிப்பையும் மாற்றிக்கொண்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில்,தற்போது அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கவனம் பெற்று வருகின்றன.
கார்த்தி நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படங்களில்’மார்ஷல்’முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கார்த்தி நடிக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.ஆனால்,தற்போது கார்த்தியின் கெட்டப் மாற்றம் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, ‘மார்ஷல்’ படத்திற்காகவும்,இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் உருவாகும் தெலுங்குப் படத்திற்காகவும் கார்த்தி வெவ்வேறு கெட்டப்களில் நடிக்க வேண்டிய சூழல் இருப்பதாகத் தெரிகிறது.இதனால்,அடுத்தடுத்த படங்களுக்கான கெட்டப்புகளை மாற்றுவதில் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே,இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திலும் கார்த்தி நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய கெட்டப்பிலேயே அந்தப் படத்தில் நடிப்பதற்கான திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கார்த்தி – பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் வேலைகள் எப்போது.?தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.




