புதன்கிழமை, ஜனவரி 22, 2025

முழு தமிழ் நடிகராக மாறிய பிரபாஸ்.. தடுத்து நிறுத்தி கல்லாவை நிரப்ப உதயநிதி போட்ட மாஸ்டர் பிளான்

Udhayanidhi Stalin Decision: பாகுபலி படத்திற்கு பிறகு ஏகப்பட்ட தமிழ் ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தி இருப்பவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இவர் நடித்துக் கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை குறி வைத்து ரிலீஸ் ஆகிறது.

ப்ராஜெக்ட் கே படமானது ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு நடிகர் படம் தமிழ்நாட்டில் பொங்கலுக்கு வருவது இதுவே முதல் முறை. இந்த தகவல் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை அளித்தாலும் உதயநிதிக்கு தூக்கி வாரி போட்டது.

Also Read: அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலி ஆகும்னு இருந்த அருள்நிதி.. உச்சகட்ட ராஜதந்திரம் இதான்

ஏனென்றால் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்துடன் உதயநிதி சேர்ந்து மிக பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இந்தியன் 2 படம் பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. இப்பொழுது உதயநிதி படத்தின் ரிலீஸ் தேதியை தடுத்து நிறுத்தி இந்தியன் 2 படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி என்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்.

இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வந்தால் பிசினஸ் பாதிக்கும் என மாஸ்டர் பிளானில் இறங்கிவிட்டார் உதயநிதி. ஆனால் தமிழ் ரசிகர்கள் இந்தியன் 2 படத்திற்காக பல வருடங்களாக காத்திருக்கும் நிலையில், மேற்கொண்டும் நான்கு மாதம்
தள்ளிப் போகிறது என தெரிந்ததும் வெறுத்துப் போய் உள்ளனர்.

Also Read: ப்ராஜெக்ட் கே-வால் பரிதவிக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்

அதிலும் பிரபாஸ், கமல் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் ப்ராஜெக்ட் கே படத்தை காரணம் காட்டி தள்ளிப் போடுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் உலகநாயகன் கமலஹாசன் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். அவர்களை பொறுத்தவரை இரண்டு படமுமே தமிழ் படம் தான். இரண்டு படத்திற்குமே தங்களது ஆதரவை கொடுப்போம் என்றும் உதயநிதி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் உதயநிதி எடுத்த முடிவில் உறுதியுடன் இருக்கிறார். அவர் இந்தியன் 2 படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யாமல் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்து எந்தவித தொந்தரவும் இல்லாமல் கல்லாவை நிரப்ப வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.

Also Read: அதிவீரனிலிருந்து வெளிவராத உதயநிதி.. சட்டையில் இடம் பெற்ற பன்றி, வைரலாகும் புகைப்படம்

Trending News