தலையை சுற்ற வைக்கும் பிரபாஸின் சொத்து மதிப்பு.. 44 வயதில் இத்தனை கோடிக்கு அதிபதியா?

Prabhas Net Worth: பிரபாஸ் சினிமாவில் பல வருடமாக இருந்தாலும் அவரது திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது பாகுபலி படம் தான். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வசூலை வாரி குவித்தது. அதன்பிறகு தான் பிரபாஸ் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். இந்த சூழலில் இப்போது அவர் கைவசம் எக்கச்சக்க படங்கள் இருக்கிறது.

இதில் சலார் படம் மிக விரைவில் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் கமலஹாசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நிலையில் அமிதாப்பச்சன் மற்றும் தீபிகா படுகோன் போன்ற பாலிவுட் பிரபலங்களும் இணைந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாஸ் இன்று தனது 44ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் ஒரு ஆடம்பர பங்களா உள்ள நிலையில் மும்பையிலும் சொந்த வீடு வைத்திருக்கிறார். மேலும் பிரபாஸ் காரில் மிகுந்த விருப்பம் உடையவர்.

அதன்படி ரோல்ஸ் ராயல்ஸ், ரோவர் ஸ்போர்ட்ஸ், ஆடி ஏ6, பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், பென்ஸ் எஸ் க்ராஸ் மற்றும் ஜகுவார் எக்ஸ்ஜேஎல் ஆகிய கார்களை வைத்திருக்கிறார். இந்நிலையில் கிட்டதட்ட 250 கோடி அதிபதியாக பிரபாஸ் இருக்கிறார். இவர் படங்களில் நடித்து வருமானம் ஈட்டி வந்தாலும் மற்ற தொழில்களில் இருந்தும் இவருக்கு வருமானம் வருகிறது.

அதன்படி ஹைதராபாத்தில் உள்ள ஒரு வீட்டை கிட்டதட்ட 40 லட்சத்திற்கு மாத வாடகைக்கு விட்டிருக்கிறார். இது தவிர விளம்பரங்களில் நடித்தும் எக்கச்சக்கமாக சம்பாதித்து வருகிறார். அதோடுமட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் போன்றவற்றிலும் நிறைய வருமானம் பிரபாஸ் பார்த்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே பிரபாஸின் படங்கள் வெற்றி பெறவில்லை. கடைசியாக அவர் கொடுத்த வெற்றிப் படம் என்றால் பாகுபலி 2 தான். ஆகையால் இப்போது சலார் படத்தை பிரபாஸ் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் தான் அவர் விட்ட மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.