வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.. பழி வெறியோடு ரீ என்ட்ரிக்கு தயாராகும் பிக்பாஸ் பிரதீப்

Biggboss 7: கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் ரசிகர்கள் சோசியல் மீடியாவே கதி என கிடைக்கின்றனர். அந்த அளவுக்கு பிரதீப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது கமலுக்கும் மிகப்பெரும் பின்னடைவாக அமைந்தது. தீர விசாரிக்காமல் அவர் கொடுத்த ஒரு தீர்ப்பு இப்போது அவருக்கே சர்ச்சையாக முடிந்துள்ளது.

அதைத்தொடர்ந்து பிரதீப்புக்கு ஆதரவாக ஒட்டுமொத்த மக்களும் கூடினார்கள். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் பிக்பாஸில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இது குறித்து ஏற்கனவே பல செய்திகள் உலா வந்தது. ஆனால் பிரதீப் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதை ஜாடை மாடையாக உறுதி செய்து இருக்கிறார்.

இன்று காலை முதலே அவருடைய அடுத்தடுத்த பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் நான் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என்றால் இரண்டு ரெட் கார்டு வேண்டும். என்னை திட்டம் போட்டு வெளியில் அனுப்பிய இரண்டு பேருக்கு கொடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Also read: பிரதீப் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகி.. மொத்த பிரச்சனைக்கும் காரணமான கருப்பு ஆடு

அது மட்டுமல்லாமல் நான்தான் அடுத்த வாரம் கேப்டனாக இருக்கணும் எனவும் கண்டிஷன் போட்டிருந்தார். இது பரபரப்பை கிளப்பிய நிலையில் அடுத்த ஒரு பதிவும் வந்துள்ளது. அதில் அவர் நீங்கள் நல்ல கேமை கொடுத்தால் நான் அதை சிறப்பாக செய்து முடிப்பேன். சத்தியமாக சொல்கிறேன் இடைவேளைக்குப் பிறகு வரும் படத்தின் பழிவாங்கும் படலம் மாதிரி என்னுடைய ஆட்டம் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து அவர் அடுத்த அதிரடிக்கு தயாராகிவிட்டார் என்று தெரிகிறது. ஆனால் இவ்வளவு ஆக்ரோஷத்தோடு அவர் இந்த பதிவை போட்டிருக்கிறார் என்றால் நிச்சயம் வீட்டுக்குள் ஏதோ நடந்திருக்க வேண்டும். அந்த உக்கிரத்துடன் தயாராக இருக்கும் இவரிடம் மாயா கேங் என்ன பாடுபட போகிறதோ தெரியவில்லை.

Also read: பிரதீப்பிடம் மண்டியிட்ட பிக்பாஸ்.. முதுகில் குத்திய 2 பேரை காலி செய்ய வரும் தாடி பாய்

அந்த வகையில் நாளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தரமான ஒரு சம்பவம் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது. பிரதீப் மட்டும் வீட்டுக்குள் மீண்டும் சென்றால் அது காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனையாகத் தான் இருக்கும். அந்த அளவுக்கு அவர் வெறியுடன் இருப்பது நன்றாகவே தெரிகிறது. எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் பிக்பாஸ் நாளை வைக்கப் போகும் ட்விஸ்ட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

pradeep-antony
pradeep-antony

Trending News