பிரகாஷ்ராஜ் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். இவர் வில்லன் கதாபாத்திரம் மூலம் மக்களை கவர்ந்தாலும் பல படங்களில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து நம்மை கண்ணீர் வர செய்துள்ளார். அவ்வாறு பிரகாஷ்ராஜ் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய 6 படங்களை பார்க்கலாம்.
எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி : ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அசின், பிரகாஷ்ராஜ், நதியா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இப்படத்தில் நதியாவின் அம்மா பாசம் பெரிதாக பேசப்பட்டாலும் படத்தின் இறுதியில் பிரகாஷ்ராஜ் அப்பா பாசத்தால் ஸ்கோர் செய்தார்.
அபியும் நானும் : திரிஷா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அபியும் நானும். அப்பா, மகளுக்கு இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்டே படம் எடுக்கப்பட்டது. திருமணம் ஆன பிறகு மகளுடனான பிரிவை தாங்க முடியாமல் படும் அவஸ்தைகள் அபியும் நானும் படத்தில் பிரகாஷ்ராஜ் பிரதிபலித்து இருப்பார்.
அறிந்தும் அறியாமலும் : விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நவ்தீப், ஆர்யா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அறிந்தும் அறியாமலும். இப்படத்தில் நவ்தீப், தந்தை ரவுடி என தெரிந்து அவரை விட்டு ஒதுங்கி இருக்கிறார். ஆனால் மகன் மீது அதீத பாசம் வைத்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
வீராப்பு : சுந்தர் சி, கோபிகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வீராப்பு. இப்படத்தில் கண்டிப்பான ஆசிரியராக உள்ள பிரகாஷ்ராஜ் தன் மகன் சுந்தர் சி பெரிய மேதை ஆக வேண்டும் என எண்ணுகிறார். அதற்கு எதிர்மாறாக உள்ளார் மகன். கடைசியில் மகனை புரிந்துகொள்ளும் அப்பாவாக மாறுகிறார் பிரகாஷ்ராஜ்.
வசூல்ராஜா எம்பிபிஎஸ் : கமலஹாசன், சினேகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். இப்படத்தில் மருத்துவ கல்லூரி தலைவராக உள்ள பிரகாஷ்ராஜ் தன் மகள் சினேகாவுக்கு நல்ல மாப்பிள்ளையை தேடுகிறார். ஆனால் கமலஹாசன் போலி டாக்டர் என தெரிந்தபின் அவரைக் கல்லூரியிலிருந்து வெளியே ஏற்றுகிறார். கடைசியில் தன் முட்டாள்தனத்தை புரிந்துகொண்ட பிரகாஷ் ராஜ், கமலுக்கு தன மகளை திருமணம் செய்து வைக்கிறார்.
தோனி : பிரகாஷ்ராஜ், இயக்கி, தயாரித்து நடித்த படம் தோனி. இப்படத்தில் மனைவி இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்க்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தந்தையாக பிரகாஷ்ராஜ் நடித்து இருந்தார். இப்படத்தில் அவருடைய மகன் படிப்பில் ஆர்வம் செலுத்தாமல் கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டி வந்தார். முதலில் மகனை கண்டிக்கும் தந்தையாக இருந்த பிரகாஷ்ராஜ் பின்பு அவனின் ஆசையை புரிந்துகொண்ட எப்படி மகனை ஜெயிக்க வைக்கிறார் என்பது தோனி.
சந்தோஷ் சுப்ரமணியம் : ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சந்தோஷ் சுப்பிரமணியம். இப்படத்தில் ஆரம்பத்தில் பிரகாஷ்ராஜ் மகன் மீது அதிக அக்கறை கொண்டதால் ஜெயம்ரவியை தனியாக இயங்க விடாமல் தன் கட்டுப்பாட்டுகுள்ளேயே வைத்துள்ளார். இறுதியில் மகனின் எண்ணத்தை புரிந்துகொண்டு சுதந்திரமாக செயல்பட விடுகிறார்.