திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

போதிதர்மனுக்கு முந்தியே அசம்பாவிதங்களை கணித்த கமலின் 5 படங்கள்.. ஊழலில் கலங்க வைத்த மகாநதி

Actor Kamal Haasan: சமூக வலைத்தளங்களில் சில வருடங்களுக்கு முன்பு ‘அன்றே கணித்தார் சூர்யா’ என்று மீம்ஸ்கள் பயங்கரமாக ட்ரெண்ட் ஆகின. அதாவது சூர்யா படத்தில் நடக்கும் விஷயங்கள் சில வருடங்களில் நிஜமாகவே சொந்த வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என மீம்ஸ்கள் வைரல் ஆகியது. ஆனால் அதற்கு முன்பே உலகநாயகன் கமலஹாசனின் படங்களில் சொல்லப்பட்ட விஷயங்கள் அப்படியே உண்மையாக நடந்து இருக்கிறது. இந்த ஐந்து படங்களில் பிரச்சனையாக சொல்லப்படும் விஷயங்கள் அடுத்தடுத்து பொதுமக்களின் நிஜ வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

மகாநதி: இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் மகாநதி. கிராமத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பம் ஒன்று நயவஞ்சகமான நண்பனை நம்பி சென்னைக்கு குடி பெயர்ந்து, அதன் பின் அவருடன் சேர்ந்து சீட் ஃபண்ட் ஆரம்பித்து நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், அந்த நண்பன் மொத்த பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடி விடுவார். கமல் அந்த சிக்கலில் மாட்டிக்கொள்வார். இந்த படத்திற்குப் பிறகு இந்த சீட் ஃபண்ட் ஊழல் சம்பவம் தமிழ்நாட்டில் அதிகமாக நடந்தது.

Also Read:கமல் தயாரிப்பில் கல்லா கட்ட போகும் 6 படங்கள்.. அஜித் கழட்டி விட்டதால் கூப்பிட்டு பட வாய்ப்பு கொடுத்த ஆண்டவர்

அன்பே சிவம்: கமலஹாசன் நடித்த படங்களில் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடும் திரைப்படமாக இருப்பது அன்பே சிவம். இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இந்த படம் வெளியானது. 2003 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆகியது. இந்தப் படத்தின் ஒரு காட்சியின் உலகநாயகன் கமலஹாசன், நடிகர் மாதவனிடம் சுனாமியை பற்றி பேசியிருப்பார். அதைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சுனாமி ஆழிப்பேரலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

தசாவதாரம்: கமலஹாசன் 10 வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த உலக சினிமாவையும் உற்று நோக்க வைத்த திரைப்படம் தான் தசாவதாரம். ஆய்வகத்தில் இருந்து வெளியே செல்லும் வைரசால் உலகம் அழிந்துவிடும் எனவும், அவ்வாறு ஏற்படாமல் தடுப்பதற்கு கமல் முயற்சி செய்வார். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு எபோலா வைரஸ் மற்றும் கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்தது.

Also Read:இரவு 3 மணின்னு கூட பாக்கமா அதுக்கு கூப்பிடுவாங்க.. புலம்பித் தவிக்கும் 46 வயது கமல் பட நடிகை

ஹே ராம்: உலக நாயகன் கமலஹாசன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்து நடித்த திரைப்படம் ஹே ராம். இந்து, முஸ்லிம்களுக்கு இடையே நடக்கும் கலவரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. 2002இல் குஜராத்தில் இதேபோன்று ஒரு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.

வேட்டையாடு விளையாடு: இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் கமலுக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. பல வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் மீண்டும் வசூலில் சாதனை படைத்தது. இதில் இரண்டு நண்பர்கள் இணைந்து தொடர் கொலை செய்வது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கும். இதேபோன்று உண்மையிலேயே உத்திரபிரதேசத்தில் மோனிந்தர் சதீஷ் தொடர் கொலை சம்பவம் நடந்தது.

Also Read:லோகேஷ் LCU-வில் இணைந்த சூப்பர் ஸ்டார்.. கமலஹாசனுடன் செய்ய போகும் அடுத்த சம்பவம்

Trending News