திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காலை வாரிவிட்ட பிரின்ஸ் படம்.. உச்சகட்ட பயத்தில் இருக்கும் விஜய், தனுஷ்

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் பிரின்ஸ். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார். மேலும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலுமே இப்படம் உருவாகி இருந்தது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்திருந்தார்.

இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதாவது படத்தில் லாஜிக் இல்லை என்றும் பிரின்ஸ் படம் ஏமாற்றத்தை தந்தது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதனால் சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனரை நம்பி சென்றதன் விளைவு இது என பலரும் கூறுகின்றனர்.

Also Read : பிரின்ஸ் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு ஹாட்ரிக் வெற்றியா, தோல்வியா? மரண பீதியில் வெளிவந்த முழு விமர்சனம்

அதாவது தமிழ் சினிமாவில் மட்டும் வெற்றி பெற்றால் போதாது, தெலுங்கிலும் மாஸ் காட்ட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு தற்போது அவரின் காலை வாரிவிட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் தோல்வி படங்கள் ஆன மிஸ்டர் லோக்கல், சீமராஜா பட தோனியில் பிரின்ஸ் படமும் அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு விழுந்த இந்த பெரிய அடி பணத்திற்காக தெலுங்கு பக்கம் சென்ற ஹீரோக்களுக்கு தற்போது பயத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தனுஷ் மற்றும் விஜய் இருவருமே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்கள்.

Also Read : கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. விஜய்க்காக எதையும் எதிர்பார்க்காமல் காப்பாற்றிவிட்ட மூத்த நடிகர்

அதாவது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷின் வாத்தி படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. அதேபோல் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனரை நம்பி பிளாப் படத்தை கொடுத்துள்ளார். இதனால் விஜய் மற்றும் தனுஷுக்கு உச்சகட்ட பயத்தை பிரின்ஸ் படம் ஏற்படுத்தி உள்ளது. மேலும் தெலுங்கு இயக்குனர்களை நம்பி ஹீரோக்கள் தோல்வி படத்தை கொடுத்து வரும் நிலையில் தனுஷ் மற்றும் விஜய் தங்களை காப்பாற்றிக் கொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

Also Read : ஜெட் போல் ஏறிய மார்க்கெட் இறங்கும் பரிதாபம்.. தனுஷ் பட நடிகை தேவை இல்லாமல் செய்யும் வம்பு

Trending News