வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

காட்டுத் தீயாகப் பரவிய கிசுகிசு.. முற்றுப்புள்ளி வைத்த ப்ரியா பவானி ஷங்கர்

செய்தி தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த பிரியா பவானி சங்கர் அதன்பின்பு சின்னத்திரை தொடர்களில் கதாநாயகியாக நடித்தார். இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாதமான் படத்தில் வாய்ப்பு கிடைக்க, தனது சிறந்த நடிப்பின் மூலம் அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார்.

தற்போது பிரியா பவானி சங்கர் பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தன்னுடைய கல்லூரி காலத்திலிருந்து உடன் படித்த ராஜ்வேல் என்பவரை பிரியா பல வருடமாக காதலித்து வந்தார். இதைப் பலமுறை பிரியா பவானி ஷங்கர் தனது சோசியல் மீடியாவில் உறுதி செய்துள்ளார்.

மேலும் நாங்கள் யாருக்காகவும் எங்கள் காதலை விட்டுக் கொடுக்க மாட்டோம், நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் என்றும் பலமுறை பிரியா பவானி ஷங்கர் கூறியுள்ளார். இந்நிலையில் இவர்களுடைய காதல் பிரேக் அப் ஆகி விட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது.

பிரியா பவானி சங்கர், ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ஓமன பெண்ணே படத்தில் நடித்திருந்தார். இதனால் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் அதனால் பிரியா முன்னாள் காதலர் இவரை விட்டுப் பிரிந்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிவந்தது. மேலும் இதைப் பற்றி பிரியா பவானி ஷங்கரும் எந்த பதிவையும் வெளியிடவில்லை.

இந்நிலையில் இந்த வதந்திக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தன் காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் ப்ரியா பவானி ஷங்கர் பதிவிட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவரும் இன்றுவரை காதல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

யாரோ கிளப்பிவிட்ட வதந்தியால் காட்டுத்தீயாக பரவி வந்த இந்த வதந்திக்கு தனது ஒற்றை பதிவு மூலம் பதிலடி கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர். தற்போது பத்து தல, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம், பொம்மை, ருத்ரன் போன்ற படங்களில் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

Trending News