வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜெயிலர் டைட்டிலுக்கு வந்த சோதனை.. கொசு தொல்லையால் பெயரை மாற்றும் முயற்சியில் நெல்சன்

Jailer Movie: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்திருக்கும் படம் தான் ஜெயிலர். இந்த படத்தின் டைட்டிலுக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வேறு ஏதாவது ஒரு டைட்டில் வைக்கலாமா என்று நெல்சன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் ஜெயிலர் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், திடீரென்று டைட்டிலை மாற்றுவது சரிப்பட்டு வராது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஸ்டிட்டாக சொல்லிவிட்டனர்.

Also Read: எக்ஸ் மாமனாருக்கு போட்டியாக களமிறங்கும் தனுஷ்.. உங்க ஆட்டத்துல இது புது ரகமாக இருக்கு மில்லர்

ஜெயிலர் தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெளியாகும். அதிலும் கேரளாவிலும் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், அங்கு தான் இந்த பிரச்சனை கிளம்பியுள்ளது. மலையாளத்தில் ஜெயிலர் என்ற டைட்டிலில் ஒரு படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

இந்த படத்தில் பிரபல நடிகர் தியான் ஸ்ரீநிவாஸ் உட்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதையும் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படத்தின் கதையும் வெவ்வேறாக தான். இருந்தாலும் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுவதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்படும் என கருதுகின்றனர்.

Also Read: யாரு ரியல் சூப்பர் ஸ்டார் என நிரூபிக்கும் நேரம் வந்துடுச்சு.. லியோ VS ஜெயிலர் பட முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட் இதுதான்

எனவே மலையாள ஜெயிலர் படக்குழு நெல்சனிடம் இந்த படத்தின் டைட்டிலை எப்படியாவது மாற்றி விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் படக்குழுவினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் மலையாள ஜெயிலர் படக்குழு விடாமல் தொடர்ந்து நெல்சனை டார்ச்சர் செய்வதால் இந்த கொசு தொல்லை தாங்க முடியல என்று, பேசாமல் டைட்டிலை மாற்றி விடலாம் என்ற யோசனைக்கு வந்தார்.

ஆனால் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி தேதி வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெறுவதால், இப்போது டைட்டிலை மாற்றினால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் காண்டேறி விடுவார்கள் என நெல்சனை பட குழுவினர் ஆஃப் செய்து வைத்துள்ளனர்.

Also Read: சூப்பர் ஸ்டார் டைட்டிலை களவாடிய 10 படங்கள்.. மாமா தானே என உரிமையோடு 4 முறை சுட்ட தனுஷ்

Trending News