Producer Ishari Ganesh films, who are struggling to make it to the screen: பிரம்மாண்டமான செலவில் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ள தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் பங்குச் சந்தையிலும் காலூன்றி வணிகத்திலும் ஈடுபட்டு வருகிறார். எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார் போல அந்த அளவுக்கு அவர் தயாரிப்பில் உருவான சில முன்னணி நடிகர்களின் படங்கள் இன்றும் திரைக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றன அவற்றில் சில,
PT சார்: இசையமைப்பாளரான ஹிப் பாப் ஆதி மீசைய முறுக்கு படத்தின் மூலம் இன்றைய இளைஞர்களின் பேவரைட் நடிகரானார். தொடர்ந்து “நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவு” போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்த ஹிப்பாப் ஆதி, ஐசரி கணேஷின் தயாரிப்பில் இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் விளையாட்டு ஆசிரியராக PT சார் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் முடிந்து அடுத்தடுத்த படத்திற்கான ஷூட்டிங்கையும் சத்தம் இல்லாமல் நடத்தி வருகிறாரே தவிர இந்த படம் வெளிய ஆவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை.
ஜோஸ்வா இமைப் போல் காக்க: ஐசரி கணேசின் தயாரிப்பில் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் வாஸ்து மேனன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தயாரான படம் “ஜோஸ்வா இமைப்போல் காக்க”. பிக்பாஸில் கலந்து கொண்ட வருண் நடித்துள்ளார் என்பதாலே படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு பின் எடுக்கப்பட்ட வெந்து தணிந்தது காடு ரிலீஸ் ஆகிவிட்டது. துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது இதற்குப் பின் தான் ஜோஸ்வாவின் பக்கம் கௌதம் தன் பார்வையே செலுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
Also read: லைக்காவுக்கு போட்டியாக இறங்கிய ஐசரி கணேஷ்.. வரிசை கட்டி நிற்கும் 7 முக்கிய படங்கள்
சுமோ: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஒத்துழைப்போடு மிர்ச்சி சிவா நடித்த படம் சுமோ. காமெடி படமாக உருவான இதில் ஜப்பானிலிருந்து கலைஞரை வரவழைத்து அவருக்காகவே அதிகமாக செலவு செய்து கடின முயற்சியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முடிக்கப்பட்ட இப்படம் இந்த ஆண்டு ஏப்ரலில் ரிலீஸ் செய்யலாமா என பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மேதாவி: பா விஜய்யின் இயக்கத்தில் ஜீவா அர்ஜுன் மற்றும் ராசி கண்ணா நடிப்பில் ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது மேதாவி. பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு கிராபிக் காட்சிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் வெளியிடப் போவதாகவும் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.